Don't Miss!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- News
86 நிமிட பட்ஜெட் உரை.. தொடர்ந்து மேஜையை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி.. எத்தனை முறை தெரியுமா? ஆஹா!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஜித் மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்ப்பவர்.. வலிமை டிஸ்ட்ரிபியூட்டர் குறித்து உதயநிதி ஸ்டாலின்!
சென்னை : நடிகர் அஜித்தின் திரைப்படங்களுக்கு இப்பொழுது இந்திய அளவில் மிகப் பெரிய மார்க்கெட் உள்ளது
நேர்கொண்ட பார்வை வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் போனிகபூர்,அஜித்,வினோத் கூட்டணியில் உருவானவலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது
இந்நிலையில் பட விழா ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் வலிமை டிஸ்ட்ரிபியூட்டர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் குறித்து பூரித்து பேசியுள்ளார்

அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக
நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் கமர்சியல் ரீதியாக மட்டுமல்லாமல் சமூக கருத்துக்களை முன்வைத்த ஒவ்வொரு படமும் வெளியாகி வருகிறது அந்த வகையில் வினோத், அஜித் முதன் முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பின்க் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை குறித்து மிக அழுத்தமாக பேசியிருந்தது

நேர்கொண்டபார்வை
இந்த படத்திற்கு பெண்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது நேர்கொண்டபார்வை மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அஜித் கூட்டணி மீண்டும் இணைந்த திரைப்படம் வலிமை.

ஹாலிவுட் தரத்தில்
போனிகபூர்,அஜித்,வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த வலிமை திரைப்படம் இந்த முறை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வந்தது கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக எந்த ஒரு அப்டேட் விடாமல் வலிமை ஹாலிவுட் தரத்தில் உருவாகி வந்தது அதிரடி சண்டை காட்சிகள் வியக்க வைக்கும் பைக் ரேசிங் காட்சிகள் என பட்டையை கிளப்பிய வலிமை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வெளியானது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் அனைவரையும் கவர வில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக ஆனது

வலிமை டிஸ்ட்ரிபியூட்டர் ரோமியோ பிக்சர்ஸ்
அடுத்ததாக மீண்டும் வினோத்,அஜித் தன்னுடைய அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த நிலையில் பட விழா ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள புரொடக்ஷன் மேனேஜராக இருந்தார். இப்பொழுது தனது கடின உழைப்பின் மூலம் ரோமியோ பிக்சர்ஸ் மூலம் அஜித்தின் வலிமை படத்தை டிஸ்ட்ரிபியூட் செய்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நெஞ்சுக்கு நீதி படத்திற்கும் டிஸ்ட்ரிபியூட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.