வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகள்... கிழக்கு ஐரோப்பாவிற்கு பறக்கும் தல
சென்னை : நடிகர் அஜித் நடிப்பில் வலிமை படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.
சில பேட்ச் வொர்க் காட்சிகளும் ஐதராபாத்தில் நடத்தப்பட்டு நேற்றைய தினம் முடிந்துள்ளது.
இந்நிலையில் ஆக்ஷன் காட்சியில் நடிக்கும் வகையில் நடிகர் அஜித் மற்றும் வில்லன் கார்த்திகேயா ஆகியோர் கிழக்கு ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

பர்ஸ்ட் லுக் வெளியீடு
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிர்கள் இதன்மூலம் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். தொடர்ந்து அப்டேட்கள் வரவுள்ளதாக இயக்குநர் எச் வினோத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா பறக்கும் அஜித்
தீபாவளி ரிலீசாக படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில பேட்ச் வொர்க்குகளை ஐதராபாத்தில் வைத்து படக்குழுவினர் முடித்துள்ளனர். நேற்றைய தினம் இதன் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதனிடையே ஆக்ஷன் காட்சிகளுக்காக அஜித் கிழக்கு ஐரோப்பாவிற்கு 10 நாட்கள் பயணமாக செல்லவுள்ளார்.

ஓராண்டாக தள்ளிபோன சூட்டிங்
படத்தில் டோலிவுட் நடிகர் கார்த்திகேயா வில்லனாக இணைந்துள்ளார். அவரும் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 7 நாட்கள் இந்த சூட்டிங் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுகாலமாக இதன் படப்பிடிப்பு தள்ளிப் போனது.

பணியை துரிதப்படுத்தும் யுவன்
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் யுவன் சங்கர் ராஜாவும் மும்முரமாக இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











