இவ்ளோ கி.மீ. ரோட் டிரிப்? நண்பர்களுடன் பைக்கில், சிக்கிம் சென்ற நடிகர் அஜித்.சென்னை திரும்புகிறார்!
சென்னை: நடிகர் அஜித்குமார், சிக்கிமுக்கு நண்பர்களுடன் பைக்கில் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார் அஜித். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனிகபூர் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது.

காயம் அடைந்தார்
அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. கொரோனா காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில், சேசிங் காட்சி ஷூட்டிங்கின் போது, அஜித் பைக்கில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். இதனால் ஷூட்டிங்கிற்கு பிரேக் விடப்பட்டது.

காசி விஸ்வநாதர்
வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சி ஒன்றை, டெல்லி அல்லது ராஜஸ்தானில் எடுக்கப்பட இருப்பதாகப் படக்குழு கூறியுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார், தனது நண்பர்களுடன் வாரணாசிக்கு சமீபத்தில் சென்றுள்ளார். அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்ட அவர், பின்னர் வரலாற்றுப் புகழ் மிக்க நகரமான சாரநாத்துக்கும் சென்றுள்ளார்.

தெருக் கடை
வாரணாசியில் அவர் தெருக் கடைகளில் நண்பர்களுடன் சாப்பிட்டுள்ளார். தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்திருந்ததால், யாராலும் அவரை அடையாளம் காண முடியவில்லை. மாஸ்க்கை கழற்றிய பிறகு அவர் யார் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பனாரசி சாட் என்ற கடையின் உரிமையாளர் சுபம் கேசரி என்பவர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Recommended Video

தெரியாமல் இருந்தது
இந்நிலையில் அவர் எதற்காக அங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இப்போது தெரியவந்துள்ளது. அதாவது அவர், சிக்கிமிற்கு, பைக்கில் ரோட் ட்ரிப் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. போகும் வழியில் அவர் வாரணாசியில் தெருக்கடைகளில் சாப்பிட்டதாகத் தெரிகிறது.

2400 கி.மீ தூரம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிக்கிம் சென்றடைந்த நடிகர் அஜித், மீண்டும் பைக்கிலேயே அங்கிருந்தே சென்னைக்கு திரும்புகிறாராம். சென்னையிலிருந்து சிக்கிம் 2400 கி.மீ ஆகும். அஜித் சிறந்த பைக் ரேஸர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இவ்வளவு நீண்ட டிரிப் சென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











