Ajithkumar - வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான்.. ஓடோடி வந்து உதவிய அஜித்குமார்.. விஷ்ணு விஷால் எமோஷனல்

சென்னை: Ajith Helped Aamir Khan (அமீர்கானுக்கு உதவிய அஜித்குமார்) மிக்ஜாம் புயலால் வெள்ளத்தில் சிக்கிய அமீர்கானுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் அஜித்குமார் உதவி செய்திருக்கிறார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருந்தது. 24 மணி நேரத்துக்கும் மேலாக விடாமல் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் உச்சக்கட்ட அவதிக்குள்ளாகினர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் முன்னெச்சரிக்கையாக திறந்துவிடப்பட்டாலும் நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்து துரைப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய ஏரியாக்களில் வெள்ளம் சூழ்ந்திருந்தது.

Ajith helped Aamir Khan and Vishnu Vishal who were caught in flood due to Michaung

முக்கால்வாசி வெள்ளம் காலி: ஏரிக்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்பகளில் வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் மற்ற இடங்களில் வெள்ளம் வடிந்துவிட்டதாகவே பெரும்பாலானோரால் கூறப்படுகிறது. மேலும் பொது போக்குவரத்து, மின் விநியோகம், பால், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் பெரும்பாலும் சீராகிவிட்டதாகவே சென்னையில் வசிப்பவர்கள் கூறிவருகின்றனர்.

பிரபலங்களுக்கு பிரச்னை: நேற்று மழை நீர் சூழ்ந்திருந்த சூழலில் ரோபோ சங்கர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்று காலில் காயத்தோடு வீடு திரும்பினார். அதேபோல் விஷால் வீட்டில் தண்ணீர் புகுந்ததாகவும், எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்ய வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டு சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

மேயரின் பதிலடி: அதற்கு பதிலடி கொடுத்திருந்த சென்னை மேயர் பிரியா, "ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைவிட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்" என பதிலடி கொடுத்திருந்தார்.

விஷ்ண்வு விஷால் பதிவு: இந்த சூழலில் நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கத்தில் தனது வீட்டை மழை நீரை சூழ்ந்துவிட்டதாகவும் உதவி செய்யுமாறும் சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்திருந்தார். அதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று விஷ்ணு விஷாலையும் அதே பகுதியில் தனது தாயின் மருத்துவத்துக்காக தங்கியிருந்த பாலிவுட் ஹீரோ அமீர்கானையும் சென்று மீட்டு வந்தனர்.

அஜித் உதவி: இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் நிலை பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்த எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் எங்கள் வில்லா நண்பர்களுக்கும் போக்குவரத்து உதவிகளை செய்துகொடுத்தார். லவ் யூ அஜித் சார்" என குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பதிவு இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X