twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    10 ஆயிரம் பேருக்கு கண் ஆபரேஷன் செய்ய உதவிய அஜித்: இது வெறும்...

    By Siva
    |

    சென்னை: 10 ஆயிரம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய நிதியுதவி அளித்துள்ளார் அஜித்.

    கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார் அஜித். அவர் கஷ்டப்பட்டு உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். ரஜினிகாந்தை மட்டும் அல்ல அஜித்தையும் கலாய்த்தவர்கள், கலாய்ப்பவர்கள் அதிகம்.

    அவர் அதை எல்லாம் கண்டு கொள்வது இல்லை.

    ஓய்வு நேரத்தில் அஜித் என்னவெல்லாம் செய்வார் தெரியுமா.. நீங்களும் கத்துக்கோங்க தல ரசிகாஸ்! ஓய்வு நேரத்தில் அஜித் என்னவெல்லாம் செய்வார் தெரியுமா.. நீங்களும் கத்துக்கோங்க தல ரசிகாஸ்!

    உதவி

    உதவி

    அஜித் திரையுலகை சேர்ந்த பலருக்கு உதவி செய்துள்ளார், செய்து வருகிறார். ஆனால் செய்த உதவியை என்றுமே சொல்லிக் காட்டாத மனிதர் அவர். மேலும் நான் அவருக்கு உதவினேன் என்று அறிக்கை வெளியிடும் பழக்கம் இல்லாதவர்.

    அஜித்

    அஜித்

    அஜித் தான் யாருக்காவது உதவி செய்தால் தயவு செய்து இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பார். ஆனால் உதவி பெறுபவர்கள் மனசு கேட்காமல் அஜித்தின் பெருந்தன்மை பற்றி வெளியே சொல்லிவிடுகிறார்கள். அப்படித் தான் அவர் பலருக்கு உதவுவது குறித்து தெரிய வருகிறது.

    பணம்

    பணம்

    அஜித் இதுவரை 10 ஆயிரம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுத்துள்ளார். இந்த விஷயம் அவர் சொல்லி வெளியே வரவில்லை. அவரின் குணத்தை பாராட்டி சொன்னவர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அஜித் செய்யும் உதவிகள் குறித்து அனைத்தும் தெரிவது இல்லை. இப்படி யாராவது சொல்வது மட்டும் தான் தெரிகிறது. வெளியே தெரியாதது நிறைய உள்ளதாம்.

    போக்குவரத்து

    போக்குவரத்து

    அஜித் தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் அவர்கள் வேலைக்கு வந்து செல்ல போக்குவரத்து வசதியும் செய்து கொடுத்துள்ளார். அஜித்தின் குணத்தை பார்த்த வேலையில்லா பட்டதாரிகள் பேசாமல் தல வீட்டில் வேலைக்கு சேர்ந்துவிடலாம் போலயே என்கிறார்கள்.

    English summary
    Ajith has helped 10,000 people to undergo eye surgery.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X