Ajith salary: மார்க் ஆண்டனி இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்?.. அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அஜித்?..

சென்னை: இந்திய சினிமாவிலே இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவில் தான் முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பளத்தை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தி வருகின்றனர். ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் 200 கோடி ரூபாய் சம்பளத்தை நோக்கி நகர்ந்து உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அந்த ரேஸில் நடிகர் அஜித்தும் தற்போது இணைந்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

லைகா தயாரிப்பில் உருவாகும் படங்கள் எல்லாம் படபூஜை வரை அறிவித்து அதன் பின்னர் தான் சூட்டிங் நடை பெற்று வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்தின் தலைவர் 170 படமும் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கி முதல் ஷெட்யூலை முடித்துள்ளது.

Ajith hiked his salary for his next with Mark Antony director Aadhik Ravichandran?

விடாமுயற்சி பூஜை போடலையா?: அடுத்ததாக திருநெல்வேலி அருகே அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதே லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் அஜர்பைஜானில் சூட்டிங் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்னமும் படத்தின் பூஜை குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

சூட்டிங் நடைபெற்று வருகிறது என்பதை கூட லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சைலண்டாக ஒட்டுமொத்த படத்தையும் முடித்து கூடிய விரைவில் தடாலடி காட்டப் போகிறாரா அஜித்குமார் என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில்: இந்நிலையில் அஜித்குமார் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலித்த நிலையில், அந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக கூறுகின்றனர்.

நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் பிரபுதேவாவை பல கெட்டப்புகளில் சைக்கோவாக காட்டி பஹிரா என பயமுறுத்தி இருந்தார்.

சம்பளத்தை உயர்த்திய அஜித்: ஆனால் அந்த எந்த படங்களும் சரியாக போகாத நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் எஸ் ஜே சூர்யாவின் அசுரத் தனமான நடிப்பின் காரணமாக வெற்றி வாகை சூடியது. ஒரு ஹீட் படத்தை கொடுத்து விட்டு வா பார்க்கலாம் என ஏற்கனவே அஜித் ஆதிக்கிடம் சொல்லி இருப்பாரோ, அதன் விளைவாகவே தற்போது இந்த கூட்டணி நடைபெறுகிறதா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Ajith hiked his salary for his next with Mark Antony director Aadhik Ravichandran?

எல்ரட் குமார் தயாரிக்க உள்ள அந்த படத்தில் அஜித்துக்கு சம்பளமாக சுமார் 150 முதல் 175 கோடி வழங்கப்பட உள்ளதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. விடாமுயற்சி படத்திற்கு நடிகர் அஜித் அதிகபட்சமாக 105 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி உள்ளதாகவும் அடுத்த படத்திற்கு ராக்கெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்தி உள்ளார் அஜித் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.

அஜித்துக்காக ஆதிக் ரவிச்சந்திரன் தாறுமாறு கதை ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் தற்போது அதனை டெவலப் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X