கதறி அழுத தாய்... தட்டிக்கொடுத்து தேற்றிய அஜித்..! மனதை கலங்கடித்த காட்சிகள்!!
சென்னை: நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் இன்று அதிகாலை தனது 84வது வயதில் காலமானார்.
அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே அவரது உடல் பெசன்நகர் மின்மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது.
அஜித், ஷாலினி, அஜித்தின் சகோதரர்கள் ஆகியோருடன் அவரது அம்மாவும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அப்போது அப்பாவின் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுத அம்மாவை, அஜித் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

உடைந்துபோன அஜித்
கோலிவுட்டில் முன்னணி நடிகரான அஜித்குமார், அடுத்ததாக லைகா தயாரிக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், அவரது அப்பா சுப்ரமணியன் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த போதே பரிதாபமாக உயிரிழந்தார். பக்கவாத பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அப்பாவை தனது வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொண்டார் அஜித். 84 வயதான சுப்ரமணியன் கடந்த 4 ஆண்டுகளாகவே படுக்கையில் இருந்தபடி சிகிச்சை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கதறி அழுத தாய்
இந்நிலையில், அஜித்தின் அப்பா சுப்ரமணியத்தின் இறுதி ஊர்வலம் காலை 10 மணியளவில் தொடங்கியது. மிகச் சாதரணமாக மின் ஆமின் வேனில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட சுப்ரமணியத்தின் உடல், பெசன்நகர் மின் மாயனத்தில் தகனம் செய்யப்பட்டது. போலீஸார் பாதுகாப்புடன் நடந்த இந்த இறுதி நிகழ்ச்சிகளில் அஜித், ஷாலினி, அஜித்தின் சகோதரர்கள் ஆகியோருடன் அம்மாவும் கலந்துகொண்டார். வயது முதிர்ந்த நிலையில் உடைந்துபோயிருந்த அவரை ஷாலினி கை தாங்கலாக அழைத்து வந்தார்.

அஜித் கட்டியணைத்து ஆறுதல்
தகனம் செய்யப்படுவதற்கு முன்பு இறுதியாக தனது கணவரின் முகத்தைப் பார்த்த அஜித்தின் அம்மா, துயரம் தாங்காமல் கதறி அழுதார். அதனைப் பார்த்து பரிதவித்துப் போன அஜித் தனது அம்மாவை கட்டியணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினார். அப்போது அஜித்தும் தனது அழுகையை கட்டுப்படுத்தப்பட முடியாமல் கண்ணீர் வடித்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, ரசிகர்களையும் கலங்கடித்துள்ளது.

அஜித்தின் அம்மா சென்டிமெண்ட்
மறைந்த சுப்ரமணியன் தனது மகன்களான அஜித் உட்பட மூவரையும் நண்பர்களைப் போல வளர்த்தவர். அதேபோல், அவர்களது அம்மாவும் அஜித் உள்ளிட்ட மூன்று பேரையும் அரவணைத்துச் சென்றவர். அஜித் எப்போதுமே தனது படங்களில் அம்மா சென்டிமெண்ட் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். துணிவுக்கு முன்பு வெளியான வலிமை படத்தில் கூட அம்மா சென்டிமெண்ட் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இந்நிலையில், அப்பாவையும் இழந்துவிட்டு உடைந்து நிற்கும் அம்மாவுக்கும் ஆறுதல் கூறி வருகிறார் அஜித்.


Click it and Unblock the Notifications











