»   »  ஒரு காட்சிக்காக 14 நாட்கள் நனைந்தபடியே நடித்த 'வீரம்' அஜீத்

ஒரு காட்சிக்காக 14 நாட்கள் நனைந்தபடியே நடித்த 'வீரம்' அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வீரம் படத்தில் வரும் மழை காட்சி ஒன்றுக்காக அஜீத் குமார் 14 நாட்கள் மழையில் நனைந்து கொண்டே நடித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கியுள்ள வீரம் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது அஜீத் கடினமாக உழைத்ததாக சிவா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

மழை காட்சி

மழை காட்சி

படத்தில் மழை காட்சி ஒன்று உள்ளது. இந்த காட்சிக்காக அஜீத் மழையில் நனைந்தபடியே நடிக்க வேண்டி இருந்தது என்று சிவா தெரிவித்தார்.

14 நாட்கள்

14 நாட்கள்

மழை காட்சியை 14 நாட்களில் படமாக்கினோம். காட்சியில் அஜீத் மட்டுமே மழையில் நனைய வேண்டும். இதற்காக நாங்கள் ஏற்படுத்திய செயற்கை மழையில் அவர் 14 நாட்களாக நனைந்தபடியே நடித்தார் என்றார் சிவா.

அக்கறை

அக்கறை

நான் எப்பொழுது எல்லாம் செயற்கை மழையில் நனைந்தாலும் உடனே அவர் என்னை அங்கிருந்து செல்லுமாறு கூறுவார். நீங்கள் நனைய வேண்டாம் என்று அக்கறையுடன் கூறினார் என்று சிவா கூறினார்.

அஜீத்

அஜீத்

அஜீத் படப்பிடிப்பின்போது சக நடிகர், நடிகைகள், படக்குழுவினர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Veeram director Siva told that Ajith got drenched for 14 days inorder to shoot a rain scene in the movie which is getting released on january 10.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil