twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் நடித்த ’ஒரு கைதியின் டைரி’ ரீமேக்கில் அஜித்?..மனோஜ் பாரதிராஜாவின் ஆசை

    |

    பாரதிராஜாவின் படைப்புகளை ரீமேக் செய்ய ஆசைப்படுவதாக மனோஜ் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

    பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி ஆகிய படங்களை ரீமேக் செய்யவேண்டும் என தான் ஆசைப்படுவதாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் தெரிவித்துள்ளார்.

    அப்படி ரீமேக் செய்யும் படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் தடத்தை மாற்றிய பாரதிராஜா

    தமிழ் சினிமாவின் தடத்தை மாற்றிய பாரதிராஜா

    1970 களின் இறுதியில் தமிழ் சினிமா பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்தது. அதில் முக்கியமான காரணகர்த்தாக்கள் பாரதிராஜா, மகேந்திரன், ஆர்.செல்வராஜ், இளையராஜா, கமல், ரஜினி என சிலரை சொல்லலாம். ஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமத்தை நோக்கி நகர்த்தியவர்கள் என பாரதிராஜா, செல்வராஜ், இளையராஜாவை சொல்வார்கள். அதன் பின் அந்தப்பாதையைல் பலர் நடைபோட்டனர். சினிமாவின் முக்கிய ஹீரோக்கள் முடிந்து அடுத்த முக்கிய ஹீரோக்களாக ரஜினி, கமல் வந்தனர்.

    பாக்யராஜின் கலக்கல் கதை வசனத்தில் ஒரு கைதியின் டைரி

    பாக்யராஜின் கலக்கல் கதை வசனத்தில் ஒரு கைதியின் டைரி

    பாரதிராஜா எடுத்த கிராமத்து படங்களுக்கு இடையே சில வித்தியாசமான கிரைம் த்ரில்லர் படங்கள் வெளிவந்தன. பெண்ணால் பாதிக்கப்பட்ட சிறுவன் பெண்களை கொலை செய்யும் சைக்கோவாக மாறும் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம். மனைவி கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்க அலையும் தந்தை, தடுக்கும் போலீஸ் அதிகாரி மகன் என்கிற ஒரு கைதியின் டைரி கதை. இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப்படங்கள் இப்போது ரீமேக் செய்தாலும் சிறப்பாக இருக்கும். கைதியின் டைரி படத்தால் இந்தியாவின் சிறந்த திரைக்கதாசிரியராக பாக்யராஜ் உயர்ந்தார்.

    மகன்களின் காலம் அப்பாக்கள் வழியில் சாதிக்கின்றனர்

    மகன்களின் காலம் அப்பாக்கள் வழியில் சாதிக்கின்றனர்

    தற்போது அப்பாக்கள் காலம் முடிந்து மகன்கள் காலம் தொடங்கியுள்ளது. அப்பாக்கள் பாதையில் போகும் மகன்களாக கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபு சிறந்த இயக்குநராக மாறியுள்ளார். இளையராஜா மகன்கள் யுவன், கார்த்தி இசையமைப்பாளர்களாக உள்ளனர். பாக்யராஜின் மகன் சாந்தனு திரைப்படங்களில் நடித்து வருகிறார், பாரதிராஜாவின் மகன் மனோஜ் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் வாய்ப்பில்லாமல் போக சிறு சிறு ரோல்களில் வருகிறார். விருமனில் கார்த்தியின் அண்ணனாக நடித்திருப்பார்.

    ஒரு கைதியின் டைரி அஜித் செய்யவேண்டும் -மனோஜ்

    ஒரு கைதியின் டைரி அஜித் செய்யவேண்டும் -மனோஜ்

    தற்போது தனது தந்தையின் டைரக்‌ஷன் பாணியை கையிலெடுக்கலாம் என மனோஜ் முடிவு செய்துள்ளார் போலும். இது பழைய படங்களை ரீமேக் செய்யும் காலம். அந்தவகையில் தான் அப்பாவின் படங்களை ரீமேக் செய்தால் நான் விரும்பிய அப்பாவின் படம் 2 அதில் ஒன்று சிகப்பு ரோஜாக்கள் ஒன்று ஒரு கைதியின் டைரி படம் என சமீபத்தில் கூறியுள்ளார். அத்துடன் கைதியின் டைரி படத்தை ஒருவேளை ரீமேக் செய்தால் அதில் நடிக்கக்கூடிய ஒரே நடிகர் அஜித் தான் என கூறியுள்ளார். மனோஜின் ஆசை நிறைவேறுமா? ரசிகர்களுக்கு மீண்டும் புத்தம்புதிய காட்சி அமைப்புகளுடன் அஜித் கைதியின் டைரி கொடுப்பாரா? அனைத்தும் காலத்தின் கையில்.

    English summary
    Manoj Bharathiraja has said that he wants to remake Bharathiraja's works.Bharathiraja's son Manoj has said that he wishes to remake Bharathiraja's sigappu rojakkal and 'Oru Kaithiyin Diary'. manoj has expressed his desire to Ajith act in such a remake film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X