'சிறந்த மனிதர், அவருடன் நடித்ததை மறக்க முடியாது..'அஜித்தை தாறுமாறாகப் புகழும் முன்னாள் ஹீரோயின்!
சென்னை: அஜித் சிறந்த நடிகர் என்று அவருடன் நடித்த முன்னாள் ஹீரோயின் புகழ்ந்துள்ளார்.
Recommended Video
சரண் இயக்கத்தில் அஜித் நடித்து 1998 ஆம் ஆண்டு வெளியான படம், 'காதல் மன்னன்'. இதில் அவர் ஜோடியாக மானு நடித்திருந்தார்.
விவேக், கரண், எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் கண்ணா, தாமு, ராம்ஜி உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஹீரோயின் மானு
கிரிஷ் கர்னாட் ஹீரோயின் மானுவுக்கு அப்பாவாக நடித்திருந்தார். பரத்வாஜ் இசை அமைத்திருந்த இந்தப்படத்துக்கு விஜயகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணுக்கு வேறொருவருடன் காதல் வருகிறது. காதலை சொல்ல முடியாமல் இருவரும் தவிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்னைகள்தான் கதை. இதில் ஹீரோயினாக நடித்திருந்த மானு, அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர்.

சிங்கப்பூர்
இந்தப் படத்தில் திலோத்தமா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். சிறந்த நடனக் கலைஞரான இவர், இந்தப் படத்துக்குப் பிறகு அதிகமான படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அஜித் ரசிகர்கள் மானுவை இன்னும் மறக்கவில்லை. பின்னர், சிங்கப்பூர் சென்ற நடிகை மானு, அங்கு செட்டிலாகிவிட்டார். அங்கு நடனப் பள்ளி நடத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு உதவியதன் மூலம் மீண்டும் மீடியாக்களில் பரபரப்பானவர் மானு.

பெருமையாக
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடன் நடித்த 'காதல் மன்னன்' ஹீரோ அஜித் பற்றி புகழ்ந்துள்ளார். அவர் கூறியிருப்ப தாவது: எனது முதல் படத்திலேயே அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். அந்தப் படம் எனக்கு பெரிய ஓபனிங்கை பெற்றுத் தந்தது. அஜித்துடன் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். அந்த அனுபவத்தை மறக்க முடியாது.

எளிமையானவர்
இத்தனை வருடங்கள் கழித்தும் அந்தப் படம் இன்னும் ரசிகர்களால் பேசப்படுவதில் எனக்கு மகிழ்ச்சி. நடிகர் அஜித் மிகவும் எளிமையானவர். சிறந்த ஆன்மாவைக் கொண்ட மனிதர். இந்தப் படத்தின் ஷூட்டிங்கில், என்னை சவுகரியமாகப் பார்த்துக்கொண்டார். இதன் படப்பிடிப்பின்போது, அஜித்தின் பெற்றோருடன் அடிக்கடி வெளியே சென்று வருவேன். இந்தப்படத்தை என்னால் மறக்கவே முடியாது. இவ்வாறு மானு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











