அஜித் ஒரு "Self Made Man"... எப்பவும் யாருக்காகவும் பயப்படாதவர் - இயக்குநர் வெற்றிமாறன்!
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் இப்பொழுது தமிழில் முன்னணி இயக்குனராக உள்ளார்
அசுரன் கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது விடுதலை மற்றும் வாடிவாசல் என இரண்டு படங்களை இயக்கி வருகிறார்
வெற்றிமாறன் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க வேண்டும் என ஆவலுடன் இருக்கையில் அஜித் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் வெற்றிமாறன் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

தேசிய விருது
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே தரமானதாக தான் இருக்கும் என ரசிகர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படங்களையும் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர். பொல்லாதவன்,ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என இயக்கிய சில படங்களிலேயே தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். இதில் அசுரன்,ஆடுகளம் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

அசுரன்
தனுஷ் கூட்டணியில் பெரும்பாலும் பணியாற்றிவரும் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. அசுரன் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மற்ற மொழி ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அதுமட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள் இப்படத்தை கொண்டாடினார்கள் சமீபத்தில் கூட ஜூனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் ராஜமெளலி என தெலுங்கு பிரபலங்கள் பலர் அசுரன் படத்தை வியந்து பாராட்டி இருந்தது தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தது

இரண்டு படங்களை
அசுரன் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இப்பொழுது வாடிவாசல் மற்றும் விடுதலை என இரண்டு படங்களை அடுத்து அடுத்து இயக்கி வருகிறார். இதில் விடுதலை படத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க முழுக்க முழுக்க காட்டுப் பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது

அஜித் குறித்து
ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக அஜித் மற்றும் விஜய்யை இயக்க தயாராகி வரும் வெற்றிமாறன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது நடிகர் அஜித்திடம் எனக்கு இரண்டு விஷயங்கள் ரொம்ப பிடிக்கும் "அவர் ஒரு Self Made Man"... எப்பவும் யாருக்காகவும் பயப்படாதவர்" என்று வெற்றிமாறன் அஜித் பற்றி கூறியுள்ளது இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











