அந்த விஷயத்தில் அஜித் அனைத்து நடிகர்களுக்கும் முன்னோடி!
சென்னை : தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரமாக உள்ளார் நடிகர் அஜித்குமார்
நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அஜித் குமர் ஹெச் வினோத் கூட்டணியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது
இந்த நிலையில் நடிகர் அஜித் அனைத்து நடிகர்களுக்கும் அந்த விஷயத்தில் முன்னோடியாக உள்ளார் என இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

பெண்கள் மீதான பாலியல்
திரைப்படங்களை வெறும் படங்களாகவும் பொழுதுபோக்காக மட்டும் இருக்கக்கூடாது அதில் ஒரு சமூக அக்கறையும் கொண்டு இருக்க வேண்டும் என்பதில் நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக படங்களில் செயல்படுத்தி வருகிறார் அந்த வகையில் நேர்கொண்டபார்வை படத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி பேசி இருந்த அஜித் மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் இணைந்த படம் வலிமை. இரண்டரை ஆண்டுகளாக மிகத் தீவிரமாக தயாராகி வந்த வலிமை சமீபத்தில் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில்
இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அதை தொடர்ந்து மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

மூன்று வேடங்களில்
தனது ஒவ்வொரு படங்களும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கும் அஜித் குமார் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த திரைப்படம் வரலாறு. அஜித் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்பா மற்றும் இரு மகன்ளாக அஜித் மொத்தம் மூன்று வேடங்களில் இந்த படத்தில் நடித்திருப்பார்.

பெண்மை தன்மை உள்ள ஆணாக
அதில் அப்பா அஜித் பெண்மை தன்மை உள்ள பரதநாட்டிய கலைஞராக இருப்பதால் பல பெண்களும் அவரை திருமணம் செய்து கொள்ள தயங்குவார்கள் அவமானப்படுத்துவார்கள். அந்த கதாபாத்திரத்திற்காகவே அஜித் பெண்களைப் போலவே மிக நளினமாக நடிக்க கற்றுக்கொண்டார். எந்த ஒரு நடிகரும் நடிக்க தயங்கும் இந்த அந்த கதாபாத்திரத்தில் அஜித் சவாலாக ஏற்றுக்கொண்டு நடித்ததை பார்த்த ரசிகர்கள் கொண்டாடினர்.

அஜித் தான் முன்னோடி
வரலாறு படத்திற்கு பிறகு அஜித் போலவே பல நடிகர்களும் பெண்மை தன்மை உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க முன்வந்துள்ளனர். எனவே நடிகர் அஜித் பல நடிகர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார் என இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் வரலாறு படத்தில் அஜித் சவாலான வேடத்தில் நடித்ததை நினைவுகூர்ந்து புகழ்ந்து பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











