கௌதம் மேனன் படத்தில் ஹீரோவும் 'தல', வில்லனும் 'தல': இரட்டை வேடங்கள்
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் வருகிறாராம்.
அஜீத் குமார் வீரம் படத்தை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் தான் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குகிறது. இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
அதற்காக அவர் ஜிம்மில் கடும் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து வருகிறார்.

8 கிலோ
அஜீத் கௌதமுக்காக ஜிம்மே கதி என்று கிடக்கிறார். அவர் இதுவரை 8 கிலோ எடையை குறைத்துள்ளாராம். படத்தில் அஜீத் 8 பேக்ஸுடன் வருகிறார் என்று கூறப்படுகிறது.

2 வேடம்
கௌதம் படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். வில்லன், ஹீரோ என்று இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

வாலி
முன்னதாக அஜீத் வாலி, வில்லன், அட்டகாசம், அசல் ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி ரிலீஸ்
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ரசிகர்களுக்கு 'தல' தீபாவளியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் கௌதம். அதாவது படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

விஜய்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் விஜய்யும் அப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் அந்த படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











