கோலிவுட்டின் 'டாம் க்ரூஸ்' அஜீத்: ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் புகழாரம்
சென்னை: அஜீத் குமார் கோலிவுட்டின் டாம் க்ரூஸ் என்று ஆரம்பம் படத்தின் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் லீ விட்டேக்கர் தெரிவித்துள்ளார்.
அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துள்ள ஆரம்பம் படத்தில் பல ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். எத்தனை முறை காயம்பட்டாலும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் அஜீத்தின் துணிச்சல் குறித்து ஆரம்பம் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் லீ விட்டேக்கர் மனம் திறந்துள்ளார்.

காரில் காயம்
அஜீத் சண்டை காட்சியின்போது காரில் சென்று காயம்பட்டார். அப்போது அந்த காரை ஓட்டியது ஆர்யா தானாம்.

கமலும், அஜீத்தும்
கமல் ஹாசனும் சரி, அஜீத் குமாரும் சரி இருவருமே கடின உழைப்பாளிகள் என்று லீ தெரிவித்துள்ளார்.

தில்
ஆரம்பம் படத்தின் சண்டைக் காட்சிகளின்போது அஜீத்தின் உடம்பில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் துணிச்சலாக கடினமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார் என்றார் லீ.

டாம் க்ரூஸ்
அஜீத் குமாரின் தில்லான ஆக்ஷன் காட்சிகளை பார்க்கையில் எனக்கு ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நினைவு தான் வந்தது என்று லீ கூறினார்.

டாம் க்ரூஸ் ஏன்?
டாம் க்ரூஸ் ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிக்க விரும்புபவர். அஜீத்தும் அப்படித் தான் என்றார் லீ.


Click it and Unblock the Notifications