தல தங்கமானவர், கடவுள் மாதிரி: சொல்வது 'மெர்சல்' சிட்டுக்குருவி
Recommended Video

சென்னை: அஜித் கடவுள் மாதிரி என்று மெர்சல் படத்தில் சிட்டுக்குருவியாக நடித்த பாட்டி தெரிவித்துள்ளார்.
விஜய்யின் மெர்சல் படத்தில் சிட்டுக்குருவியாக நடித்து பிரபலமானவர் சீனியம்மா. அவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசத்தில் நடித்துள்ளார்.

அஜித்துடன் நடித்துள்ள சிட்டுக்குருவி அவர் கடவுள் மாதிரி என்று கூறியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சிட்டுக்குருவி கூறியிருப்பதாவது,
தல ஒரு கடவுள் மாதிரி. கேரவனுக்குள் போக மாட்டார், மக்களுடன் தான் இருப்பார், எங்களுடன் தான் பேசுவார், எங்களுடன் தான் சாப்பிடுவார், கடவுள் என்றால் அவர் தான் கடவுள். தங்கமானவர் தல என்று தெரிவித்துள்ளார்.
விஸ்வாசம் படத்தில் நயன்தாரா, ஈஸ்வரி ராவ், தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், கோவை சரளா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. படத்தில் புதிது புதிதாக ஆட்களை சேர்த்தபடியே உள்ளார் சிவா. விஸ்வாசம் படம் குறித்து எந்த தகவலும் கசிந்து விடாமல் கவனமாக இருக்கிறார் சிவா. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் கசிந்து படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
விஸ்வாசம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











