அஜீத் என்னுடைய ஜார்ஜ் க்ளூனி: குஷ்பு
சென்னை: சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் அஜீத் குமார் தான் தன்னுடைய ஜார்ஜ் க்ளூனி என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் ஹீரோக்கள் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் நடிப்பது சகஜம். ஆனால் நம் நாட்டில் எந்த உட்டானாலும் எத்தனை வயதானாலும் ஹீரோக்கள் டை அடித்து கருப்பு முடியுடன் நடிப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தில்லாக நடித்து வருகிறார் அஜீத் குமார். அவரை ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியுடன் சிலர் ஒப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஆரம்பம் படம் அருமையான பொழுதுபோக்கு படம். அஜீத் அருமையாக உள்ளார். அவரின் குளோசப் ஷாட்டை பார்த்த போதெல்லாம் என் இதயத்துடிப்பு அதிகரித்தது. அவர் என்னுடைய ஜார்ஜ் க்ளூனி என்று தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications