AK 62 படத்துக்காக ஃபேவரைட் இயக்குநரை டிக் செய்த அஜித்... இப்படியா பதில் சொல்லணும்..?

சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இதனால் அவர் அடுத்து நடிக்கவுள்ள ஏகே 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த இந்தப் படம் தற்போது மகிழ் திருமேனியின் கைகளில் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே ஏகே 62 படத்திற்காக அஜித் தனது ஃபேவரைட்டான இயக்குநரை டிக் செய்திருந்ததாகவும், ஆனால் அது நடக்காமல் போய்விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 துணிவில் இருந்து ஏகே 62

துணிவில் இருந்து ஏகே 62

அஜித் ரசிகர்கள் தற்போது துணிவு வைப்-இல் இருந்து ஏகே 62 வைப்ரேஷனுக்கு மாறிவிட்டனர். அஜித் - வினோத் கூட்டணியில் துணிவு படம் கொடுத்த மாஸ் ஹிட்டால், ஏகே 62 மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக காணப்படுகிறது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குவார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

 அஜித் டிக் செய்த இயக்குநர்

அஜித் டிக் செய்த இயக்குநர்

ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது குறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். முன்னதாக ஏகே 62 படத்திற்காக வெங்கட் பிரபு, விஷ்ணுவர்த்தன், கேஎஸ் ரவிக்குமார் ஆகியோரும் அஜித்திடம் கதை சொல்லியிருந்ததாகக் கூறப்படுகிறது. அஜித்துக்கு மங்காத்தா படம் மூலம் மரண மாஸ் ஹிட் கொடுத்தவர் வெங்கட் பிரபு. அதனால் அஜித் - வெங்கட் பிரபு காம்போவில் மங்காத்தா 2 உருவாகினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பேசிவந்தனர். அதேநேரம் அஜித் விஷ்ணுவர்த்தனை டிக் செய்ததாக சொல்லப்படுகிறது.

 அஜித் அழைத்தும் வரமுடியவில்லை

அஜித் அழைத்தும் வரமுடியவில்லை

விஷ்ணுவர்த்தன் முதலில் அஜித்துக்காக ஒரு கதையுடன் காத்திருந்தாராம். ஆனால், ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானதால், அவர் மலையாள ஹீரோவுடன் அடுத்த படத்தில் இணைய முடிவெடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் தான் ஏகே 62-வில் இருந்து விக்னேஷ் சிவன் விலகுவது உறுதியாகியுள்ளது. அதனால் ஏகே 62 படத்துக்காக மீண்டும் விஷ்ணுவர்த்தனை அஜித்தே அழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், விஷ்ணுவர்த்தன் புதிய படத்தில் கமிட் ஆகிவிட்டதால் அஜித்துடன் இணைய முடியவில்லை என சொல்லப்படுகிறது.

 விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஏகே 63

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஏகே 63

2007ல் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான பில்லா திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. ரஜினியின் பில்லா ரீமேக் வெர்ஷனாக உருவான இந்தப் படத்தில் அஜித்தை செம்ம ஸ்டைலிஷாக காட்டியிருந்தார் விஷ்ணுவர்த்தன். அஜித், நயன், யுவன், விஷ்ணுவர்த்தன் காம்போவில் தரமாக ரிலீசாகி பட்டையைக் கிளப்பியது பில்லா. இதேகூட்டணியில் 2013ம் ஆண்டு ரிலீஸான ஆரம்பம் திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனால் அஜித் - விஷ்ணுவர்த்தன் கூட்டணி மீண்டும் இணையும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். மேலும், அஜித்தின் ஏகே 63 படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X