அஜீத் ஒரு நடமாடும் ஆத்திச்சூடி: காதல் மன்னன் நாயகி மானு
சென்னை: காதல் மன்னன் படத்தில் அஜீத் உடன் டூயட் பாடிய நடிகை மானு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் என்ன சத்தம் இந்த நேரம் திரைப்படம் மூலம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்.
சிங்கப்பூரில் சிகிச்சைக்காக சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மகள் போல இருந்து கவனித்துக் கொண்ட மானு, அப்போது மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். சினிமா வேண்டாம் நடனம் மட்டுமே போதும் என்றிருந்த என்ன சத்தம் இந்த நேரம் படத்தின் கதைதான் மானுவை மீண்டும் நடிக்க சம்மதிக்க வைத்துள்ளதாம்.
சினிமாவில் நடித்து 16 ஆண்டுகள் ஆன பின்னரும் தன்னுடைய முதல் ஹீரோ அஜீத்தை இன்னமும் மறக்காமல் புகழ்ந்து தள்ளுகிறார்.
காரணம் மானுவிற்கு அஜீத் கூறும் சமையல் டிப்ஸ்கள்தானாம். அஜீத் தன்மீது கொள்ளும் அக்கறை அபரிமிதமானது என்று கூறும் மானு அவர் ஒரு நடமாடும் ஆத்திச்சூடி என்கிறார்.

ரஜினியும் அஜீத்தும்
சூப்பர் ஸ்டார் ரஜினியை அப்பா என்று கூறும் மானு அவர் தனக்கு கடவுள் மாதிரி என்று கூறியுள்ளார். அதே போல அஜீத்தும் தனக்கு கடவுள் என்கிறார்.

இமயம் மாதிரி
இருவருமே எளிமையான மனிதர்கள், மனிதாபிமானம் கொண்டவர்கள் என்று கூறும் மானு, பணத்தாலும், புகழாலும் அடித்துச் செல்லமுடியாத இமயம் மாதிரி மாறாதவர்கள் என்றும் கூறியுள்ளார்.

என் வழிகாட்டிகள்
ரஜினியும், அஜீத்தும்தான் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும், சினிமாவிலும் வழிகாட்டிகள் என்று கூறியுள்ளார் மானு.

நடமாடும் ஆத்திச்சூடி
அஜீத் ஒரு நடமாடும் ஆத்திச்சூடி. அழகான வாழ்க்கைக்கு அவரிடம் நிறைய ஆலோசனைகள் கிடைக்கும் என்றும் நெகிழ்ச்சியோடு கூறுகிறார் மானு.


Click it and Unblock the Notifications











