அஜீத் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார்: அருண் விஜய்
சென்னை: அஜீத் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார் என்று நடிகர் அருண் விஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் படத்தில் அருண் விஜய்யும் நடித்துக் கொண்டிருக்கிறார். உடம்பை கும்மென்று வைத்துள்ளதாக அஜீத் அருணிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அருண் விஜய் ட்விட்டரில் அஜீத் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்
நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பழகிப் பார்த்ததில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் எதையும் போலியாக செய்ய மாட்டார் என்று அருண் விஜய் ட்வீட் செய்துள்ளார்.

அஜீத் ரசிகர்கள்
அருண் விஜய்யின் ட்வீட்டை பார்த்த அஜீத் ரசிகர்கள் அதை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

விஜய் ரசிகர்கள்
அஜீத் இவ்வளவு தான் போட சொன்னாரா இல்லை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பிட் போடச் சொன்னாரா என்று வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

மனோபாலா
இப்படி தான் அஜீத்தை சந்தித்தது பற்றி நடிகர் மனோபாலா ட்வீட் செய்ததற்கு அஜீத் தான் விளம்பரத்திற்காக ட்வீட் செய்யச் சொன்னாரா என்று விஜய் ரசிகர்கள் நக்கல் அடித்தனர்.

கண்டுகொள்வாரா விஜய்?
அஜீத் பற்றி யார் ட்வீட் செய்தாலும் விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதை இளைய தளபதி கண்டுகொள்வாரா?


Click it and Unblock the Notifications











