Ameer - பெஸ்ட் சாய்ஸ் அஜித் தான்.. விஜய்யை எல்லாம் பொருத்திப் பார்க்கவே முடியாது.. மனம் திறந்த அமீர்
சென்னை: Ameer (அமீர்) இயக்குநர் அமீர் அஜித் மற்றும் விஜய் குறித்து பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சேது, நந்தா ஆகிய படங்களில் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சூர்யாவை புதுவிதமாக காண்பித்து காதல் ஜானரில் அந்தப் படத்தை இயக்கி வெற்றி பெற்றார் அமீர்.

அதனையடுத்து அவர் இயக்கிய ராம் படத்தின் மூலம் அவரே தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். அப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக போதிய ரெஸ்பான்ஸை பெறவில்லை.
பருத்திவீரன்: மூன்றாவது படமாக பருத்திவீரனை இயக்கினார். கார்த்தியின் முதல் படமான அது இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. கார்த்தியுடன் ப்ரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டாகி ப்ரியாமணிக்கு தேசிய விருதையும் கார்த்திக்கு சிறந்த அறிமுகத்தையும் பெற்று கொடுத்தது.
நடிகர்: அவர் தற்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். வடசென்னையில் அவர் ஏற்றிருந்த ராஜன் கதாபாத்திரம் அதிக அளவில் கொண்டாடப்பட்டது. வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமீர். மேலும் அவரே தயாரித்து நடித்திருக்கும் மாயவலை படமும் ரிலீஸாகவிருக்கிறது. அதன் டீசர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஆதிபகவான்: அமீர் இப்போது நடிகராக வலம் வந்துகொண்டிருந்தாலும் அவர் மீண்டும் படம் இயக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அவர் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு ஜெயம் ரவியை வைத்து ஆதிபகவான் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்கவில்லை. ஆர்யாவை வைத்து ஆரம்பித்த சந்தனத்தேவன் படமும் பாதியில் நின்றது. அடுத்ததாக அவர் இயக்கத்தில் இறைவன் மிகப்பெரியவன் படம் உருவாகவிருக்கிறது.
அமீர் பேட்டி: இந்நிலையில் அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “மௌனம் பேசியதே விஜய் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அப்போது அவரது வியாபாரம் வேறு மாதிரி இருந்தது. அதேபோல் அவர் புதுமுக இயக்குநருடன் பயணிக்க விரும்பினாரா என்றும் தெரியவில்லை.
அதேபோல் ஆதிபகவான் படத்துக்கு பெஸ்ட் சாய்ஸ் என்றால் அது அஜித் தான். ஏனென்றால் அவரால்தான் மாஸாகவும் செய்ய முடியும்; நளினமாகவும் செய்ய முடியும். விஜய்யை அதில் பொருத்திப்பார்க்கவே முடியாது. ஆனால் அந்தப் பட சமயத்தில் அஜித்தை அப்ரோச் செய்யும் இடத்தில் நான் இல்லை” என்றார்.


Click it and Unblock the Notifications











