அஜித் தான் எனக்கு ரொமான்ஸ் பண்ண perfect ஹீரோ ... நடிகை லைலா !

சென்னை : கன்னக்குழி புன்னகையின் மூலம் ரசிகர்களை வீழ்த்தியவர் நடிகை லைலா

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்

லைலா மீண்டும் திரைப்படங்களில் எப்பொழுது தொடர்ந்து நடிப்பார் என ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த லைலா அஜித் தான் எனக்கு ரொமான்ஸ் பண்ண பர்ஃபெக்ட்டான மேட்ச் என ஜாலியாக பேசியுள்ளார்.

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும்

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும்

கன்னக்குழி அழகின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகை லைலா . பல மொழிகளில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள லைலா கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் எதிலும் தோன்றவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பு துறுதுறுப்பான நடிப்பு கன்னக்குழி அழகு என ரசிகர்களை தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ரசிக்க வைத்து வந்தவர் தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்தவர்.

ஜெயிக்க முடியும்

ஜெயிக்க முடியும்

கவர்ச்சி காட்டாமல் நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் ஜெயிக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர். தமிழில் விஜயகாந்துக்கு ஜோடியாக கள்ளழகர் படத்தில் நடித்து அறிமுகமான லைலா அதைத் தொடர்ந்து முதல்வன், ரோஜாவனம்,பார்த்தேன் ரசித்தேன், தீனா,அள்ளித்தந்த வானம், நந்தா, உன்னை நினைத்து,மௌனம் பேசியதே,உள்ளம் கேட்குமே, பிதாமகன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளவர். இதில் தீனா, பரமசிவன், திருப்பதி உள்ளிட்ட படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.

சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில்

சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில்

திருமணத்திற்குப் பிறகு படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்த லைலா சில தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இருப்பினும் இந்த கன்னக்குழி அழகியின் நடிப்பை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்க இப்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வரும் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அஜித் கூட ரொமான்ஸ்

அஜித் கூட ரொமான்ஸ்

சர்தார் வெளியான பிறகு நடிகை லைலா முழுமூச்சுடன் மீண்டும் படங்களில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த லைலா அதில் ஆன் ஸ்கிரீனில் என்னுடன் ரொமான்ஸ் செய்வதற்கு அஜித் தான் பர்ஃபெக்ட்டான மேட்ச், கண்டிப்பாக தீனா படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தது எனக்கு எப்போதும் ஃபேவரைட்டாக உள்ளது. அஜித்துடன் ரொமான்ஸ் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என லைலா பூரித்து அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X