twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்கேயும் தலைகுனிய வேண்டிய அவசியம் இல்லை.. அவர் தான் எப்போதும் தல(ஏ கே).. தியாகராஜன் எமோஷனல்!

    |

    சென்னை : 1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த்.

    அதேபோல் 1993ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜித் குமார்.

    அஜித், பிரசாந்த் புகைப்பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பிரசாந்த்தின் தந்தை இயக்குநர் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

    ஓடிடியிலும் அதிரடி காட்ட தயாராகும் விக்ரம்.. இந்த வார ஓடிடி லிஸ்ட் பார்க்கலாமா! ஓடிடியிலும் அதிரடி காட்ட தயாராகும் விக்ரம்.. இந்த வார ஓடிடி லிஸ்ட் பார்க்கலாமா!

    சினிமா பின்னணி

    சினிமா பின்னணி

    நடிகர் பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படத்திற்கு பிறகு, வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, திருடா திருடா, ஜீன்ஸ் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தவர். 90களில் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் 1993ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜித் குமார். தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை போன்ற பல படங்களை தொடர்ந்து ஹிட் கொடுத்தார். 90களில் நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகர் அஜித் நடித்து பல ஹிட் படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து இவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டியும் இருந்தது. அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் அஜித்தை கொண்டாட, பிரசாந்த் ரசிகர்களும் பிரசாந்தை கொண்டாடினர். இருவரும் முன்னணி நடிகர்களாக இருந்த அந்த சமயத்தில் ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    சர்ச்சை புகைப்படம்

    சர்ச்சை புகைப்படம்

    நடிகர் பிரசாந்த் மாலையுடன் நிற்க, நடிகர் அஜித்குமார் தலை குனிந்து நிற்பது போலவும் அந்த புகைப்படம் இருக்கும். இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள். சினிமா பின்னணி இருப்பதனால் பிரசாந்துக்கு முதல் மரியாதை கிடைப்பதாகவும், அஜித்தை அவமானப்படுத்தியதாகவும், அதனால் அஜித் தலை குனிந்து நிற்பதாகவும் கூறி வந்தனர். பலமுறை நடிகர் பிரசாந்தும் அவரது சார்பாக இதற்கான விளக்கத்தை கொடுத்தாலும், அஜித் ரசிகர்கள் அதனை விடுவதாக இல்லை. எப்பொழுதெல்லாம் அந்த புகைப்படம் ட்ரெண்ட் ஆகின்றதோ அப்பொழுதெல்லாம் அஜித்தை அவமானப்படுத்தியதாக நினைத்து சமூக வலைதளத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டே உள்ளனர்.

    அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை

    அவமானப்படுத்தும் நோக்கம் இல்லை

    இந்த புகைப்படம் குறித்து நடிகர் பிரசாந்த் ஏற்கனவே கூறியிருந்த வீடியோவில், மாலை அணிவிப்பது என்பது ரசிகர்கள் ஆசைப்பட்டு செய்வது. எனக்கு மட்டும் இல்லை நடிகர் அஜித்துக்கும் அந்த விழாவில் மாலை அணிவித்தார்கள். ஆனால் எனக்கு மாலை அணிவித்த புகைப்படம் மட்டுமே சமூக வலைதளங்களில் பரவியது. அவருக்கு மாலை அணிவித்த புகைப்படங்கள் இதுவரை சமூக வலைதளத்தில் வெளிவரவில்லை. ஒவ்வொரு நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் அந்த ரசிகர்கள் நடிகர்கள் மீது இருக்கும் பாசத்தை வெளிகாட்டுகின்றனர் அவ்வளவுதான் என்று நடிகர் பிரசாந்த் கூறியிருந்தார்.

    தலை குனிய வேண்டிய அவசியம் இல்லை

    தலை குனிய வேண்டிய அவசியம் இல்லை

    இது குறித்து நடிகர் பிரசாந்தின் தந்தையான இயக்குநர் தியாகராஜன் கூறுகையில் , ஒவ்வொரு ஆண்டும் பிரசாந்தின் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடுவோம். அப்படி பிறந்தநாள் கொண்டாடும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமாக தான் அது இருக்க வேண்டும். யாரும் யாரையும் தலை குனிய வைக்க இதை செய்யவில்லை, நடிகர் அஜித் தலை குனிய வேண்டிய அவசியமும் இல்லை, அவர் தான் என்றும் தல என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்த புகைப்படம் ட்ரெண்டான சமயத்தில் நடிகர் பிரஷாந்த் விளக்கம் அளித்த நிலையில், தற்போது இயக்குநர் தியாகராஜன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அஜித் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று கூறியதில் இருந்து ஏகே என்று அவர் ரசிகர்கள் கூப்பிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. பிரசாந்த் மற்றும் தியாகராஜன் அடிக்கடி வெளிவரும் இந்த புகைப்படம் பற்றிய தகவல்களுக்கு இருவரும் தங்களது கருத்துக்களை சொல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

    Recommended Video

    Andhagan | Prashanth | என் ரசிகர்கள்தான் எனக்கு எல்லாமே | Filmibeat Tamil
    நீண்ட நாட்கள் கழித்து

    நீண்ட நாட்கள் கழித்து

    நடிகர் பிரசாந்த் தற்போது அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரசாந்துடன் இணைந்து கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த் ,சமுத்திரகனி போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். படத்தை இயக்குகிறார் தியாகராஜன். இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதூண் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். பல முன்னணி இயக்குனர்கள் இப்படத்தின் உரிமை பெற முயற்சித்த நிலையில், இயக்குனர் தியாகராஜன் பெரிய பட்ஜெட் கொடுத்து இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், வனிதா, மனோபாலா போன்ற பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

    English summary
    Ajith is the Real Thala in Tamil Cinema Says Prashanth Father Thiagarajan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X