twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த அஜித்

    By Siva
    |

    Recommended Video

    அஜித் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்- வீடியோ

    சென்னை: அஜித் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.

    திருப்பூரில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர். இதையடுத்து பிரதமர் மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்றும், மாநிலத்தில் தாமரை மலரச் செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    அவரின் பேச்சை கேட்ட அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் மன்றத்தில் சேர்ந்தாலும் சேர்வோமே தவிர பாஜகவுக்கு மட்டும் பிரச்சாரம் செய்யவே மாட்டோம் என்றனர்.

    அரசியல்

    அரசியல்

    ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்று இருக்கும் அஜித்துக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற பேச்சு கிளம்பியது. அவர் அனுமதி இல்லாமல் அவர் பெயர் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து தான் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று அஜித் தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அறிவுரை

    அறிவுரை

    பேட்ட, விஸ்வாசம் தொடர்பாக அஜித், ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டிருக்கின்றனர். அந்த மோதல் தேவையில்லாதது, அதை தவிர்க்க வேண்டும் என்று அஜித் தனது அறிக்கை மூலம் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ரசிகர்கள் மோதுவதை பார்த்தும் அஜித் அமைதி காப்பது ஏன் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

    விஸ்வாசம்

    விஸ்வாசம்

    பேட்ட, விஸ்வாசம் படங்கள் மோதவில்லை, சேர்ந்து வந்துள்ளன என்று இயக்குனர் சிவா தெரிவித்தார். இந்நிலையில் தான் யாருடனும் மோத வரவில்லை என்று அஜித் தெரிவித்து தன்னையும், தன் படங்களையும் வேறு யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்று கூறிவிட்டார். ரஜினியை பெரிதும் மதிக்கும் நபர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஜினி

    ரஜினி

    ரஜினியின் பெயரை கெடுத்துவிட்டு பாஜக அடுத்ததாக அஜித்துக்கு குறி வைத்துள்ளது. இனி அவருக்கும் கெட்ட பெயர் வரும் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் தான் அஜித் விளக்கம் அளித்து எந்த கட்சியையும் ஆதரிப்பவன் நான் இல்லை என்பதை மக்களுக்கு புரிய வைத்துவிட்டார்.

    படங்கள்

    படங்கள்

    தான் உண்டு, தன் படங்கள் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று இருக்கும் அஜித் தனது ரசிகர்களும் அவ்வாறு இருக்கவே விரும்புகிறார். அதை விடுத்துவிட்டு அரசியல் பக்கம் போக அவருக்கு விருப்பம் இல்லை. இதை அவர் முன்பே தெரிவித்துள்ள போதிலும் தற்போது நினைவூட்டியுள்ளார்.

    English summary
    Ajith has made two points very clear in his statement. One is he is not at all interested in politics, another one is he doesn't want his fans to clash with any other actor's fans on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X