’ஆரம்பம்’ படத்தில் அலப்பறை பண்ணப் போறது அஜீத் இல்லையாம்....ஆர்யாவாம் !!!
சென்னை : விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ஆரம்பம் படத்தில் குறும்புத்தனமான கேரக்டரில் கலக்கி இருப்பது ஆர்யா தானாம்.
பொதுவாக அஜீத் படங்கள் என்றேலே, ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்ப்பது அவரது குறும்புத்தனமான நடிப்பைத் தான். அதிலும் நீண்ட நெடுங்காலமாக பேரே வைக்காமல் தயாராகி வந்த விஷ்ணுவர்த்தன் படத்தில் அஜீத்தின் கேரக்டர் மிகவும் குறும்புத்தனமாக இருக்கும் என ரசிகள் ஆவலாக காத்திருக்க, அதெல்லாம் இல்லீங்க என மறுத்துள்ளார் விஷ்ணுவர்த்தன்.

நட்சத்திரப்பட்டாளம்...
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்சி என நட்சத்திரப்பட்டாளமே நடிக்கும் படம் ‘ஆரம்பம்'

ரசிகர்கள் ஆர்வம்....
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உருவாகி வரும் இப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். சமீபத்தில் இப்படம் சம்பந்தமாக மனம் திறந்தார் விஷ்ணுவர்த்தன்.

விபத்தின் பிண்ணனியில் ஆர்யா....
அதில் அஜீத் சந்தித்த விபத்தின் பிண்ணனியில் ஆர்யா இருப்பதாக பரபரப்பைக் கிளப்பினார். அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியை அளித்துள்ளார்.

ஆர்யானாலே குறும்புதான்...
அதாகப்பட்டது, ‘ஆரம்பம் படத்தில் குறும்புத்தனமான கேரக்டரில் அஜீத் நடித்திருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் படத்தில் அதிக குறும்புத்தனம் காட்டியிருப்பது ஆர்யா தான்' எனக் கூறியுள்ளார் விஷ்ணுவர்த்தன்.

படத்தின் தூண்கள்....
மேலும் படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே முக்கியத்துவம் வாய்ந்ததாம். ஏதாவது ஒரு கேரக்டர் குறைந்தால் கூட படம் முழுமை பெறாதாம். அந்தளவுக்கு கதைக்களம் பிண்ணப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











