twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித் உதவி செய்தாரா இல்லையா, உண்மையில் நடந்தது என்ன?: வில் அம்பு இயக்குனர் விளக்கம்

    By Siva
    |

    Recommended Video

    அஜித்தை பற்றி பொய் தகவல் வெளியிட்ட சுசீந்திரன் -வீடியோ

    சென்னை: ரோஜா ரமணனுக்கு அஜித் உதவி செய்தாரா இல்லையா என்பது குறித்து வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.

    உதவி இயக்குனர் ரோஜா ரமணனின் சிறுநீரக கோளாறு சிகிச்சைக்காக அஜித் பெரிய தொகை அளித்தார் என்று இயக்குனர் சுசீந்திரன் ட்விட்டரில் தெரிவித்தார். சுசீந்திரன் சொன்னது பொய் என்று இலக்கியன் தெரிவித்தார்.

    இந்நிலையில் வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இது குறித்து கூறியிருப்பதாவது,

    உதவி

    உதவி

    எங்களது நண்பன் ரோஜா ரமணன் சிறுநீரகப் பாதிப்பால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, மருத்துவச் செலவிற்காக அதிகளவு பணம் தேவைப்பட்டது. அதற்காக அவன் நண்பர்களான நான், சுசீந்திரன், இலக்கியன் மற்றும் இப்போது இயக்குநர்களாக இருக்கும் ஸ்ரீ பாலாஜி, எஸ்.டி.சுரேஷ் குமார், கார்த்திகை முருகன், கணேஷ் பெருமாள் மேலும் நல்ல மனம் படைத்த உதவி இயக்குநர்கள் 30 பேர் சேர்ந்து திரைத்துறையில் உள்ளவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் உதவி கேட்ட அத்தனை பேரும் இல்லை என்று மறுக்காமல் உதவி செய்தனர்.

    வில்லன்

    வில்லன்

    இந்த நிலையில்தான் அஜித் சாரிடம் கேட்கலாம் என்று ‘வில்லன்' பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றோம். 30 உதவி இயக்குநர்கள் சேர்ந்து ஒரு உதவி இயக்குநருக்காக உதவி கேட்டு வந்ததைப் பார்த்த அஜித் சார், எங்களை உடனடியாக சந்தித்தார்.

    சுசீந்திரன்

    சுசீந்திரன்

    எங்களின் சார்பாக மூன்று பேரை மட்டும் அழைத்தார். நான், இலக்கியன், சுசீந்திரன் மூன்று பேரும் சென்று அவரிடம் பேசினோம். ரோஜா ரமணனின் நிலையை சொன்னோம். அவர் அடுத்து எதுவும் கேட்காமல் உடனடியாக, ‘ஆபரேஷன் பேக்கேஜ் அமவுண்ட் எவ்வளவு?' என்று மட்டும் கேட்டார்.

    செலவு

    செலவு

    அதற்கு நாங்கள், ‘ரோஜா ரமணனின் உடல்நிலை தேறிய பின்புதான் ஆபரேஷன் பற்றியே முடிவு செய்ய முடியும்' என்று மருத்துவர்கள் சொன்னதைச் சொன்னோம். அதற்கு அவர் தன் மேனேஜர் ராஜாவை மருத்துவமனைக்கு அனுப்பி பணம் கொடுக்கச் சொன்னார். மேனேஜர் ராஜா தானே மருத்துவமனைக்கு வந்து, மருத்துவமனையின் பெயரிலேயே 20 ஆயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

    15 ஆண்டுகள்

    ஒருவேளை ரோஜா ரமணனின் உடல்நிலை ஆபரேஷன் செய்துகொள்ளும் அளவிற்கு இருந்திருந்தால், ஆபரேஷனுக்காக முழுத்தொகையையும் அவரே தரும் எண்ணத்தில் தான் ‘ஆபரேஷன் பேக்கேஜ் அமவுண்ட் எவ்வளவு?' என்று கேட்டார். இறுதியில் ரோஜா ரமணனை எவ்வளவு முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. இது நடந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், உண்மையில் அஜித் சாருக்கு இதெல்லாம் நியாபகம் இருக்குமா என்றுகூடத் தெரியவில்லை. நடந்து இது தான் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரமேஷ்.

    English summary
    Vil Ambu director Ramesh Subramaniam tweeted saying Ajith indeed helped assistant director Roja Ramanan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X