விக்ரம் வேதா இயக்குநருடன் இணையும் அஜித்... அப்ப சிவா? Exclusive
Recommended Video

விவேகத்தில் சிவா கொடுத்த தோல்வியின் வலியை அஜித் சீக்கிரம் மறக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. அடுத்து அஜித் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குநர் அதைத்தான் காட்டுகிறது.
தனக்காக கதை தயார் செய்யாமல் நல்ல கதையாக தயார் செய்யும் இயக்குநர்களாகத் தேடி அப்படி அவர் டிக் அடித்திருப்பது புஷ்கர் காயத்ரியை. ஓரம்போ, வ குவார்ட்டர் கட்டிங், விக்ரம் வேதா என்று டார்க் ஃப்ளேவர் கதைகளாக சொல்லி அடிப்பவர்கள் இந்த ஜோடி.

ஜிஎஸ்டி விளைவால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவது இனி சிரமம் என்று சொல்லப்பட்ட நிலையில்தான் விக்ரம் வேதா வெளியானது. டிக்கெட் விலை முக்கியம் இல்லை. நல்ல படமா என்பதுதான் முக்கியம் என்பதை நிரூபித்தது விக்ரம் வேதா.
நமக்கு வந்த தகவல்படி இந்த இயக்குநர் ஜோடியை அழைத்து கதை கேட்டு ஓகே சொல்லியிருக்கிறாராம் அஜித். விரைவில் அறிவிப்பு முறையாக வரலாம். சிவா தயார் செய்யும் கதையை பொறுத்து அஜித் அவருடன் மீண்டும் இணையலாம். ஆனால் அது இந்த படத்துக்கு பின்பாகத்தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications











