அண்ணாத்த படத்துல அவருமா.. தீயாய் பரவும் தகவல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: அண்ணாத்த படத்தில் பிரபல முன்னணி நடிகரும் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 168வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்திற்கு அண்ணாத்த என பெயரிடப்பட்டுள்ளது.
படத்தின் பெயர் நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.

ஒவ்வொரு நாளும்
அண்ணாத்த படத்தில் ஏற்கனவே நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சூரி சதீஷ் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர். படத்தில் நடிப்பவர்களின் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒருவர் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித்
படம் பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் என்று ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் .நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நண்பர் என்பதால்
நடிகர் அஜித்தை வைத்து வரிசையாக நான்கு படங்களை கொடுத்தவர் இயக்குநர் சிறுத்தை சிவா. அதுமட்டுமின்றி அஜித்துக்கும் சிறுத்தை சிவாவுக்கும் இடையே நல்ல நட்பும் உள்ளது. இதனை காரணமாக வைத்து அஜித்தை தனது படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் சிவா பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸாக இருக்கும்
ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இது உண்மைதானா நிஜமாவே அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அஜித் நடிக்கவுள்ளாரா? யாராதுவது சீக்கிரம் உறுதிப்படுத்துங்கள் என ரசிகர்கள் கெஞ்சாத குறையாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரு வேளை அஜித்தும் ரஜினியும் இந்தப் படத்தில் இணைந்து நடித்தால் அது பெரும் மாஸாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.


Click it and Unblock the Notifications











