யாருமே எதிர்பார்க்கலை.. 4 இளம் இயக்குனர்களை அதிரடியாக டிக் செய்த அஜித்.. அடுத்தடுத்து 2 படம்!
நடிகர் அஜித் தனது அடுத்த இரண்டு படங்களை இளம் இயக்குனர்களை வைத்து நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
Recommended Video
சென்னை: நடிகர் அஜித் தனது அடுத்த இரண்டு படங்களை இளம் இயக்குனர்களை வைத்து நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி வெற்றிகரமாக இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும் இது.
அந்த படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு நேர்கொண்ட பார்வை வெளியானது. படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.

எப்படி
இதனால் இயக்குனர் வினோத் உடன் மீண்டும் படம் எடுத்து வருகிறார் நடிகர் அஜித். கோலிவுட்டில் இருக்கும் மாஸ் இயக்குனர்களை விட இதுபோன்ற வித்தியாசமாக படம் எடுக்கும் இயக்குனர்கள் நன்றாக ஹிட் கொடுக்கிறார்கள். கதையும் நன்றாக இருக்கிறது என்று நடிகர் அஜித் கருதுகிறார்.

அடுத்து என்ன
அதனால் நடிகர் அஜித் தொடர்ந்து இது போல வித்தியாசமான கதை கொண்ட இயக்குனர்கள் உடன் படம் பண்ண இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தன்னுடைய அடுத்த இரண்டு படங்களுக்கு இயக்குனரை தேடி வருகிறார். இதற்காக அவர் நான்கு பேரிடம் கதை கேட்டு இருக்கிறார் என்கிறார்கள்.

யார் எல்லாம்
அதன்படி விக்ரம் வேதா படம் எடுத்த புஷ்கர்-காய்த்ரியிடம் அஜித் கதை கேட்டு உள்ளார். இவர்கள் ஒரு டான் கதையை கூறி இருப்பதாக தகவல்கள் வருகிறது. மேலும் திரில்லர் ஜானரில் கார்த்திக் நரேன் ஒரு கதையை அஜித்திடம் கூறி இருக்கிறார்.

வேறு யார்
இது இல்லாமல் இயக்குனர் மகிழ் திருமேனி ஒரு ஆக்சன் திரில்லர் கதை ஒன்றை அஜித்திற்கு சொல்லி உள்ளாராம். இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறுகிறார்கள். இன்னும் மாயா இயக்குனர் அஷ்வினிடம் அஜித் கதை கேட்க இருக்கிறார்.

என்ன வாய்ப்பு
இதனால் இந்த 4 இயக்குநர்களில் இரண்டு பேரை அஜித் தேர்வு செய்ய போகிறார் என்கிறார்கள். வரிசையாக அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்க உள்ளார். இரண்டு படத்தின் ஷூட்டிங் ஒரே நேரத்தில் துவங்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











