Ajith: “அஜித் படம்னா FDFS ஷோ விசில் அடிச்சுப் பார்ப்பேன்..” சூப்பர் ஸ்டார் சொன்ன ரகசியம்!
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் படங்களை முதல் நாள் முதல் ஷோ விசிலடிச்சுப் பார்ப்பேன் என சூப்பர் ஸ்டார் சொன்னது வைரலாகி வருகிறது.
அஜித் படம்னா விசிலடிச்சுப் பார்ப்பேன்
கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித்துக்கு தமிழ் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம். அவரது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். அதேபோல், ஏகே 64 படத்தை வெற்றிமாறனும், ஏகே 65 மூவியை பிரசாந்த் நீலும் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுபற்றி அபிஸியலாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜித்தின் படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன் என கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் மனம் திறந்து கூறியுள்ளார்.
கன்னட திரையுலகில் மாஸ் காட்டி வந்த சிவராஜ்குமார், ஜெயிலர் படத்தில் நரசிம்ஹா என்ற கேமியோ ரோலில் நடித்திருந்தார். மொத்தமே இரண்டே காட்சிகளில் வந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினியை விட செம்ம கெத்து காட்டியிருந்தார். இதனால் அதுவரை சிவராஜ்குமாரை தெரியாத தமிழ் ரசிகர்கள் கூட அவரை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர், வரும் 12ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. பீரியட் ஜானரில் பக்கா ஆக்ஷன் மூவியாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவராஜ்குமாரின் கேரக்டர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவராஜ்குமார், தொடர்ச்சியாக ப்ரோமோஷன்களிலும் பங்கேற்றார்.
அப்போது பேசிய சிவராஜ்குமார், கோலிவுட்டில் அஜித்தை தனக்கு ரொம்ப பிடிக்கும் எனக் கூறினார். மேலும், அஜித் படங்கள் ரிலீஸாகும் போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கப் போய்விடுவேன். அன்று எந்த வேலையாக இருந்தாலும் முதலில் அஜித் மூவி தான், ரசிகர்களுடன் ஜாலியாக விசிலடிச்சுப் பார்த்து ரசிப்பேன் என சிவராஜ்குமார் கூறியுள்ளார். சிவராஜ்குமார் பேசிய இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











