'கொல வெறி'யில் சண்டை போடும் ரசிகர்கள்... மவுனம் காக்கும் அஜித்... இப்பவும் இப்டி இருந்தா எப்டி தல!
பேட்ட - விஸ்வாசம் படங்களின் டிரெய்லர்களை வைத்து சமூக வலைதளங்களில் ஒரு போரே நடந்து வருகிறது. ஆனால் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அஜித் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : பேட்ட திரைப்படத்துடன் அஜித் ரசிகர்கள் மோதிக்கொள்ளும் நிலையில் நடிகர் அஜித், இந்த சமயத்திலும் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என புரியவில்லை.
பேட்ட திரைப்படத்துடன் போட்டி போட்டு பொங்கலுக்கு ரிலீசாகும் படம் விஸ்வாசம். இந்த போட்டி டிரெய்லரில் இருந்தே தொடங்கிவிட்டது. 28ம் தேதி வெளியான பேட்ட டிரெய்லருக்கு செம மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
அதேபோல், நேற்று வெளியான விஸ்வாசம் படத்தின் டிரெய்லரும், அஜித் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. இந்த டிரெய்லரை யூடியூபில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் ஆக்கினர் அஜித் ரசிகர்கள்.

பேட்ட Vs விஸ்வாசம்
அதோடு நிறுத்திக்கொள்ளாமல், பேட்ட டிரெய்லருடன் ஒப்பிட்டு விஸ்வாசம் டிரெய்லரை தூக்கிப் பிடித்து கமெண்ட் மழை பொழிந்தனர் அஜித் ரசிகர்கள். அதற்கு ஏற்றார் போல், பேட்ட படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்கு கவுன்டர் கொடுப்பது போல் அமைந்திருத்தது விஸ்வாசம் டிரெய்லர்.

கவுன்டர் கொடுக்கும் வசனங்கள்
இதுகுறித்து அஜித் ரசிகர்கள் சிலர், "கொல காண்டுல இருக்கேன் என ரஜினி பேசும் வசனத்துக்கு பதில் அளிக்கும் வகையில், 'உங்கள பாத்தா கொல வெறி வரனும், ஆனா எனக்கு உங்கள பிடிச்சிருக்கே' என விஸ்வாசத்தில் அஜித் பேசுகிறார். அதேபோல், குடும்ப சென்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு என ரஜினியின் எச்சரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் தனது மொத்த அட்ரசையும் சொல்லி, ஒத்தைக்கு ஒத்த வாடா என அஜித் பதில் அளிக்கும் வகையில் ஒரு வசனம் உள்ளது", என தாங்களாகவே கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டுகின்றனர்.

காரசார விவாதம்
இந்த விவகாரத்தால், டிவிட்டரில் நேற்று முதல் காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு ஒருபடி மேலே போய், மீம் கிரியேட்டர்களும் தங்கள் பங்குக்கு பேட்ட படத்தை ஓட்ட ஆரம்பித்துட்டனர். இதனால் இந்த விவகாரம் ரஜினி vs அஜித் என் பாதையில் நகர ஆரம்பித்துவிட்டது.

அஜித் மவுனம்
ஆனால் அஜித் தனது ரசிகர்களை தடுக்காமல், மவுனம் காத்து வருகிறார். அஜித்திடன் ஒப்புதல் பெறாமல் விஸ்வாசம் டிரெய்லர் நிச்சயம் வெளியிடப்பட்டிருக்காது. இந்த டிரெய்லர் வெளிவந்தால், இப்படி தான் நடக்கும் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும். இதனால் அஜித்தின் விருப்பத்துடன் தான் இந்த விஷயங்கள் நடக்கின்றன என்ற பேச்சு கோலிவுட்டில் நிலவுகிறது.

நடிகர் அஜித்
பொதுவாக எந்த ஒரு சமூக பிரச்சினைக்கும் நடிகர் அஜித் கருத்து கூறுவதில்லை. ஒரு தொழில்முறை நடிகரான அவரிடம் இருந்து அதனை எதிர்பார்ப்பது தவறுதான். ஆனால் ரஜினி போன்ற மூத்த நடிகருக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் தனது ரசிகர்களை கட்டுப்படுத்துவதற்காகவாவது அஜித் வாய் திறக்கலாமே என சில மூத்த சினிமாகாரர்கள் முணுமுணுக்கின்றனர். நீங்கள் செய்வீர்களாக அஜித்...


Click it and Unblock the Notifications











