Ajith 62 : அஜித் 62.. கொரியன் படத்தின் ரீமேக்? இணையத்தில் பரவும் தகவல் உண்மையா?
சென்னை : நடிகர் அஜித்தின் 62 படம் கொரியன் படத்தின் ரீமேக் என்று தகவல் வெளியாக உள்ளதால், அது என்ன படம் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ந் தேதி வெளியானது. வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில், மஞ்சு வாரியர்,சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன்,அமீர், பாவ்னி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

துணிவு
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவனும் இதனை உறுதி செய்திருந்தார். ஏகே 62 என அழைக்கப்படும் இப்படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி வில்லனாகவும் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

அஜித் 62
ஆனால், Ak 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும், விக்னேஷ் சிவன் தயார் செய்து வைத்திருந்த கதை அஜித்துக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிடிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, மகிழ்திருமேனியுடன் கை கோர்த்து உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை

சத்தமே இல்லாமல் பூஜை
அஜித் 62 படம் குறித்த அப்டேட் எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த மாதம் இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான பூஜை சத்தமே இல்லாமல் நடந்து முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அஜித் 62 திரைப்படம் குறித்த அனைத்தையும் படக்குழு மிகவும் சீக்ரெட்டாக வைத்து இருப்பதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த ஆண்டு வாய்ப்பில்லை
துணிவு படத்திற்கு கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் அஜித், அதற்காக ஏகே62 இயக்குநரை படாத பாடு படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அஜித் 62 திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்குதான் வெளியாகும் என்றும் தெரிகிறது.

கொரியன் படத்தின் ரீமேக்கா?
இந்நிலையில், அஜித்தின் 62 திரைப்படம் கொரியன் படத்தின் ரீமேக் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. இதற்காக லைகா நிறுவனம் கொரியன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியானதை அடுத்து, அஜித்தின் ரசிகர்கள் அது எந்த கொரியன் படம் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். ஆனால் மகிழ் திருமேனி கொரியன் ரீமேக் படத்தை இயக்கு விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











