AK 64 Update: பெரிய பெரிய சர்ப்ரைஸ் எல்லாம் இருக்கு.. வெயிட் பண்ணுங்க.. ஆதிக் ரவிச்சந்திரன் பளிச்!
சென்னை: இந்த நாளை தமிழ் சினிமா வரலாற்றில் மங்காத்தா நாள் என்று மாற்றி எழுதும் அளவுக்கு அஜித் ரசிகர்கள் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸை கொண்டாடி வருகிறார்கள். புது படத்தின் ரிலீஸைப் போல இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரவேற்று வருகிறார்கள். படம் பார்க்க வந்த அஜித்தின் தீவிரமான ரசிகரும், அஜித்தின் 64 வது படத்தின் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன், 64 வது படம் குறித்த சில அப்டேட்களை தெரிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். படம் அஜித்தின் 50 வது படமாக வெளியானது. படம் வெளியான கால கட்டத்திலேயே பெரும் வெற்றியை குவித்தது. இது ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் மெல்ல மெல்ல தலை தூக்கியபோது அஜித் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் தான். மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்வது தொடர்பான அறிவிப்பு என்பது ஒவ்வொரு ஆண்டு அஜித் பிறந்த நாள் காலகட்டத்தில் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அப்படியான எந்த அறிவிப்பும் வராது.

மங்காத்தா ரீ ரிலீஸ்: இப்படி இருக்கும்போது இந்த ஆண்டு, கொஞ்சம் கூட ரசிகர்கள் எதிர்பார்க்காத காலத்தில் மங்காத்தா படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தனது எக்ஸ் பக்கத்தில், கிங் மேக்கர் இஸ் பேக் என்று பதிவிட, மங்காத்தா ரீ ரிலீஸ் உறுதி ஆனது. இன்று படம் ரீ ரிலீஸ் ஆகி வேற லெவல் சம்பவம் செய்து வருகிறது. படத்தைப் பார்க்க படக்குழுவினர் வந்திருந்தனர். சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் படம் பார்க்க வந்த வெங்கட் பிரபு, மகத், பிரேம் ஜி, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் ரசிகர்களுடன் படம் பார்த்தனர்.
அஜித்குமார் 64 அப்டேட்: இது ஒரு புறம் இருக்க, படம் முடிந்த பின்னர், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் அவர் இயக்கும் அஜித்தின் 64ஆவது படம் குறித்த அப்டேட் கேட்ட போது, " படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும். ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு பிடிக்கும் வகையில் படத்தை எடுக்க உள்ளோம், படத்தின் இசையமைப்பாளர் தொடங்கி நடிகர்கள் அவரை அனைத்தும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











