உசுரே நீதானே.. படுக்கையில் படுத்துக்கிடக்கும் ஷாலினி.. அஜித் மகன் என்ன பண்றாரு பாருங்க!
சென்னை: நடிகை ஷாலினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே மைனர் சர்ஜரி ஒன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. நடிகை ஷாலினி இன்னமும் பூரணமாக குணமடையவில்லை என்று தகவல்கள் வலம் வருகின்றன. இந்நிலையில், படுக்கையில் படுத்துக் கிடக்கும் ஷாலினியுடன் மகன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அஜித் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்து மாஸ் காட்டி வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி என கைவசம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அஜித் குமார்.

சினிமாவில் எந்தளவுக்கு சின்சியராக இருக்கிறாரோ அதை விட ஒரு படி அதிகமாகவே தனது குடும்பத்தின் மேல் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.
ஓடோடி வந்த அஜித்: நடிகை ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் அஜித். படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அஜித் சென்னைக்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், அன்றைய தினத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த நாள் காலையிலேயே அஜித் சென்னைக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது மனைவியை பார்த்து ஆறுதல் சொன்னார். அந்த போட்டோ வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆனந்தக் கண்ணீர் விடச் செய்தது.
தொடர் சிகிச்சையில் ஷாலினி: நடிகை ஷாலினிக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை குறித்த தகவல்கள் வெளியே கசியவில்லை. ஆனால், முக்கியமான அறுவை சிகிச்சை தான் என்று கூறுகின்றனர். தொடர்ந்து படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார் ஷாலினி என்று கூறுகின்றனர். இந்நிலையில், ஷாலினி வெளியிட்டுள்ள ஒரு போஸ்ட் மேலும், ரசிகர்களை உணர்ச்சி வசப்பட வைத்திருக்கிறது.
நெற்றியில் முத்தம்: தனது மகன் ஆத்விக் தனது நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படுத்த படுக்கையாக ஷாலினி இருந்து வரும் நிலையில், மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் அவரை பத்திரமாக பார்த்து வருவதாக கூறுகின்றனர்.
ரசிகர்கள் பிரார்த்தனை: நடிகை ஷாலினி விரைவில் பூரண குணமாகி குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் சீக்கிரமே போடுவார் என ஏகப்பட்ட அஜித் ரசிகர்களும் ஷாலினி ரசிகர்களும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
தாமதமாகும் விடாமுயற்சி: நடிகர் அஜித் குமார் லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். குறுகிய காலத்தில் இந்த படம் தயாராகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து இந்த படம் தாமதமாகி வருவது ரசிகர்களையும் படக்குழுவினரையும் பாதித்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு விடாமுயற்சி வெளியாகாது என்பதை அறிந்து தான் சிவகார்த்திகேயன் அமரன் படத்தை தீபாவளி ரிலீஸாக வெளியிட முடிவு செய்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். ராஜ்கமல் தயாரிப்பில் அமரன் உருவாகி வரும் நிலையில், தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கிறது. அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











