அஜித்தின் பில்லா ரீ ரிலீஸ்.. தியேட்டரை அலறவிட்ட ரசிகர்கள்!
சென்னை: வேட்டையன், தங்கலான், கங்குவா என்று அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருந்தாலும், எவர் கிரீன் திரைப்படமாக இருக்கும் சில படங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் குறையவே குறையாது. அப்படிப்பட்ட ரசிகர்களுக்காகவே 20 ஆண்டுகளுக்கு முன் தியேட்டரை அலறவிட்ட திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் அஜித்திற்கு திருப்புமுனையாக அமைந்த பில்லா திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது.
இயக்குநர் ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இதில் ரஜினிகாந்த் உடன் ஸ்ரீ பிரியா, பாலாஜி, தேங்காய் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் ரஜினிகடத்தல்காரர் மற்றும் அப்பாவியான நபர் என இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது திரையரங்குகளில் 260 நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அஜித்தின் பில்லா: இந்த படம் வெளியாகி 17 வருடங்களுக்கு பிறகு பில்லா என்ற பெயரில் அஜித் நடித்து இருந்தார். விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் உருவான பில்லா திரைப்படம் கடந்த 2007ம் ஆண்டு வெளியானது. என்னதான் நடிகர் ரஜினியின் பில்லா பட ரீமேக் என்றாலும், ஏகே ஸ்டைலில் உருவான படம் நல்ல வரவேற்பையே பெற்றது. அஜித்துக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்த இப்படம் அஜித்குமாரின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் பிஜிஎம் கிங் என்ற பெயரை வாங்கி கொடுத்த இந்த படத்தில், நமீதா, பிரபு,ரஹ்மான்,ஆதித்யா மேனன், சந்தானம், பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படம் வசூல் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ரசிகர்களிடம் வரவேற்பு: அண்மைக்காலமாக ரீ ரிலீஸ் ஆகும் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கமல் நடித்த ஆளவந்தான் புதிய தொழில்நுட்பத்துடன் தியேட்டரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த முத்து, த்ரி,மயக்கம் என்ன என அடுத்தடுத்த படங்கள் வெளியானது. அதேபோல காதலர் தினத்தை முன்னிட்டு காதலை போற்றும் திரைப்படமான சிவா மனசுல சக்தி, 96, பிரேமம், சீதா ராமம் போன்ற படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்றன.
பில்லா ரீ ரிலீஸ்: அந்த வகையில் இன்று அஜித்தின் பில்லா 1 திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்திற்கு பலமுறை நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனையடுத்து, படம் மீண்டும் நீண்ட மாதங்களுக்கு பிறகு வரும் பிப்ரவரி 23ஆம் தேதியான இன்று தமிழகம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. இதனை அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











