மச்சானுடன் மாஸ் போஸ்.. யார் தாடி பெருசுன்னு போட்டி வைக்கலாம் போலயே.. அஜித்தின் லேட்டஸ்ட் க்ளிக்!
சென்னை: நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையத்தையும் காலை முதலே ஆட்கொண்டு வருகின்றன.
Recommended Video
தனது மனைவி ஷாலினி மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உடன் அஜித் ஏகே 61 லுக்கில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், திரெளபதி, ருத்ரதாண்டவம் படங்களின் ஹீரோவும் தனது மச்சானுமான ரிச்சர்ட் ரிஷியுடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட மாஸ் புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.

சுத்திப் போடுங்க
தலைவரெல்லாம் தலைக்கு பொய்யையும் மையையும் போர்த்திக்கொள்ளும் நாட்டில், தல அஜித்தின் தனித்துவம் அழகு. நரையில் தெரியும் நேர்மை அழகோ அழகு. அழகான குடும்பம். சுத்தி போடுங்க!: என நடிகை கஸ்தூரி அஜித்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து பதிவிட்டுள்ளார். அஜித் ரசிகர்களும் இதையே தான் சொல்லி வருகின்றனர்.

ஹேண்ட்ஸம் அஜித்
நடிகர் அஜித் அன்று முதல் இன்று வரை அதே அழகுடன் தான் ஆன் ஸ்க்ரீனிலும் ஆஃப் ஸ்க்ரீனிலும் அசத்தி வருகிறார். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பல நாட்கள் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில், ஏகே 61 படத்தின் லுக்கை எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

வசூல் பாதிப்பா
வலிமை படத்தின் வசூல் முதல் வாரத்தில் இருந்த வேகத்தில் இரண்டாவது வாரத்திலேயே இல்லாமல் போனது தான் இப்படி வரிசையாக புதிய போட்டோக்கள் டிரெண்டாக காரணம் என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தாலும் அஜித்தின் ஏகே 61 லுக்கை பார்த்து அசந்து போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மச்சானுடன் செம மாஸாக
மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களுடன் கூடுதலாக வெளியாகி உள்ள ஒரு புகைப்படம் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஷாலினியின் சகோதரரும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷியுடன் அஜித் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

திரெளபதி ஹீரோ
இயக்குநர் ஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி சர்ச்சைகளையும் சாதனைகளையும் படைத்த திரெளபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களின் நாயகன் ரிச்சர்ட் ரிஷி அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகே 61 படத்தில் ரிச்சர்ட் ரிஷியும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளாரா? என்கிற கேள்விகளையும் கிளப்பி உள்ளனர்.

யார் தாடி பெருசு
வெள்ளை தலை முடி மற்றும் தாடியுடன் இந்த பக்கம் காதில் கடுக்கன் அணிந்து கலக்கலாக அஜித் அமர்ந்திருக்க அந்த பக்கம் கருப்பு தாடியுடன் ரிச்சர்ட் ரிஷி தனது அடுத்த படத்திற்காக தயார் ஆகி வருகிறார். இருவரது தாடியில் யார் தாடி பெருசு என போட்டியே வைக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











