ஆசையாக தோளில் கை வைத்து ஷாலினிக்கு கேக் ஊட்டிவிட்ட அஜித்.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: நடிகர் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத சூழலில், அவரது அடுத்த படமான 'குட் பேட் அக்லி' படம் குறித்த அறிவிப்பு வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அஜித் மனைவி ஷாலினிக்கு கேக் ஊட்டிவிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் நடித்த துணிவு படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலான நிலையில், அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாததால், ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். விடாமுயற்சி படம் குறித்த அப்டேட் எதாவது வெளியாகுமே என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்னர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதுக்குக் கீழே உள்ள நரம்பில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

Ajith kumar and Shalini Ajith latest video trending on social media

அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, வீடு திரும்பினார். இதையடுத்து, விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வில் இருக்கும் படி, மருத்தவர்கள் அறிவுறுத்தியதால் தற்போது அஜித் ஓய்வெடுத்துவருவதாக கூறப்படுகிறது.

விடாமுயற்சி என்னாச்சு: மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில், சஞ்சய்தத், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கஸன்ட்ரா எனப் பலரும் நடித்து வருகின்றனர். ஆக்‌ஷனும் எமோஷனும் கலந்த கலவையாகப் படம் உருவாகி வருகிறது. அஜர்பைஜானில் இதன் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், இன்னும் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படமும் முடிந்துவிடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வழக்கமாக ஒரு படத்தை முடித்தவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித், விடாமுயற்சி படத்தை முடிக்காமலே அடுத்த படத்தில் ஒப்பந்தமாகி உள்ளது. அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், விடாமுயற்சி படம் என்ன ஆச்சு என்ற கேள்வி எழுப்பி உள்ளது.

குட் பேட் அக்லி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்திற்கு, 'குட் பேட் அக்லி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பட டைட்டில், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட்டாலும், நடிகர்களின் தேர்வு இன்னமும் முடிவாகவில்லை. அந்த படத்திற்கு, பஹீரா, மார்க் ஆண்டனி படங்களின் ஒளிப்பதிவாளரான அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். மார்க் ஆண்டனி படங்களுக்கு எடிட்டிங் செய்த விஜய் வேலுக்குட்டி இந்த படத்திற்கு படத்தொகுப்புப் பணிகளை செய்ய இருக்கிறார்.

கேக் ஊட்டிவிட்ட அஜித்: இந்நிலையில், நடிகர் அஜித் தனது காதல் மனைவி ஷாலினிக்கு கேக் ஊட்டிவிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. எதற்காக அந்த பார்ட்டி என்று தெரியவில்லை. ஆனால், அந்த வீடியோவில் அஜித், ஷாலினி இருவரும் சேர்ந்து கேக் வெட்ட, அருகில் இருந்தவர்கள் கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்த, மனைவின் தோளில் கை வைத்து, அஜித் ஆசையாக கேக்கை ஊட்டிவிடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தல, தாய், தாரம் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X