ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
சென்னை: தனது மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித்குமார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்த வருகிறார். அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தேர்தல் முடிந்த பின்னர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது பிறந்தநாளை முடித்து விட்டு தான் அஜித் குமார் படப்பிடிப்புக்கு செல்வார் என்று தெரிகிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டு அஜித் குமார் மற்றும் ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று தங்களின் 24-வது திருமண படு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
ஒரே படத்தில் காதல்: குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடிகை ஷாலினி நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நிலையில் ஹீரோயினாக காதலுக்கு மரியாதை, அமர்க்களம், அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என சில படங்களில் மட்டும் நடித்தார். அமர்க்களம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட காதல் காரணமாக 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
24-ஆம் ஆண்டு திருமண நாள்: நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தனது மகளின் பிறந்தநாள் மற்றும் மகனின் பிறந்தநாள் என அனைத்து கொண்டாட்டங்களையும் மிஸ் செய்யாமல் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் தனது 24 ஆம் ஆண்டு திருமண நாளையும் தனது குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
ஃபைவ் ஸ்டார் ஓட்டல்: சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டார் ஓட்டலில் தனது மனைவியுடன் திருமண நாளை அஜித்குமார் கொண்டாடியுள்ளார். அந்த ஓட்டலுக்கு அவர் வரும்போது அவரைப் பார்த்து ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
அஜித் மடியில் ஏஞ்சல்: இருவரும் புக் செய்துள்ள டேபிளில் அஜித் அமர்ந்திருக்க அவரது மடியில் மனைவி ஷாலினி அமர்ந்திருக்கும் செம பியூட்டிஃபுலான புகைப்படம் தற்போது வெளியாகி தாறுமாறாக டிரெண்டாகி வருகிறது. ஷாலினி தலையில், லைட் அடிக்கும் கிரீடம் எல்லாம் அணிந்துக் கொண்டு அப்படியே ஏஞ்சல் போல காட்சி தருகிறார். அந்த புகைப்படம் தற்போது #ShaliniAjithKumar என்கிற ஹாஷ்டேகுடன் டிரெண்டாகி வருகிறது.
அடுத்து அஜித் பிறந்தநாள்: வரும் மே 1ம் தேதி நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. அஜித் குமாரின் பிறந்தநாளையும் பிரம்மாண்டமாக கொண்டாட இந்த முறை பெரியளவில் குடும்பத்தினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், நடந்து முடிந்த தேர்தலில் அஜித் குமார் காலையில் முதல் ஆளாக திருவான்மியூரில் உள்ள தனது வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப் போட்டு சென்றார்.
விடாமுயற்சி அப்டேட் வருமா?: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ம் தேதி விடாமுயற்சி படத்தின் அட்பேட் வருமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன்ர். விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது தொடங்கி படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்றும் ரசிகர்கள் ரொம்பவே வெயிட் செய்து வருகின்றனர். மேலும், அஜித் பிறந்தநாளுக்கு மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











