மெய்யழகனில் அஜித் - விஜய்.. அடடே இது நல்லா இருக்கே.. பிரேம் குமார் மிஸ் செய்ததை AI ஆண்டவர் நிறைவேற்றிட்டாரு
சென்னை: கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் என்றால் அது மெய்யழகன். படத்தில் ஒரு ஆக்ஷன் காட்சி கிடையாது, கிளாமர் பாடல் கிடையாது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் கமர்ஷியல் மசாலா படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ, அது இந்த படத்தில் கொஞ்சமும் இல்லை. மெய்யழகன் படம் பார்த்த பெரும்பாலானவர்களுக்கு, ஒரு வாழ்வை வாழ்ந்த அனுபவத்தை ஏற்படுத்திவிட்டது. இப்படி இருக்கும்போது இந்த நான் அரவிந்த் சாமி, எனது கார்த்தி இவர் தான். நான் கார்த்தி எனது அரவிந்த் சாமி இவர்தான் என்று ரசிகர்கள் இணையத்தில் பூரித்துப் போய் மாறி மாறி டேக் செய்த சம்பவங்களும் நடைபெற்றது. அவை இப்போதும் கூட நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இப்படி இருக்கும்போது, இந்த படத்தில் கார்த்தி நடித்த மெய்யழகன் கதாபாத்திரத்தில் தளபதி விஜய்யும் அரவிந்த்சாமி நடித்த அருண்மொழி கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்தும் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று என்றைக்காவது யோசித்து உள்ளீர்களா? அப்படி ஒரு கற்பனையில் படத்தை யோசித்துப் பார்த்தால் எவ்வளவு சிறப்பான படமாக அது இருந்திருக்கும். இரண்டு நடிகர்களின் ரசிகர்களையும் திருப்தி படுத்தும் கதையாக இருந்திருக்கும். படத்தில் வில்லனே இல்லை. இருவரும் ஆக்ஷன் காட்சிகள் இல்லாத படத்தில் நடித்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்படி இருக்கும்போது, இந்த படம் இருவருக்குமே நன்றாக இருந்திருக்கும்.

அஜித் - விஜய்: சரி, இயக்குநர் பிரேம்குமார் தான் மிஸ் செய்துவிட்டார். அதுதான் இருக்கவே இருக்கிறதே AI . இந்த AI தொழில்நுட்பத்தை வைத்து, மெய்யழகன் படத்தில் இருக்கும் சில அற்புதமான காட்சிகளில் அரவிந்த் சாமி மற்றும் கார்த்தியை நீக்கிவிட்டு அஜித் மற்றும் விஜய்யை இணைத்துள்ளார் இணைய வாசி ஒருவர். அந்த படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் லைக்குகளை குவித்து வருகிறது. இதைப் பார்த்த மற்ற இணையவாசிகள் கூட, அட இயக்குநர் பிரேம்குமார் மிஸ் செய்ததை, ஏ.ஐ. வெச்சு இணையவாசிகள் படம் ஓட்டுறாங்களேப்பா என்று பாராட்டி வருகிறார்கள்.
மெய்யழகன் பட காட்சிகள்: குறிப்பாக, அஜித் விஜய் ஒன்றாக பீர் குடிக்கும் காட்சி, இருவரும் சைக்கிளில் ஒன்றாக செல்லும் காட்சி, இருவரும் இந்த மான் உந்தன் சொந்த மான் பாடலை பாடும் காட்சி என படத்தில் இடம்பெற்றுள்ள சில ஐகானிக் காட்சிகளுக்கான புகைப்படங்களை ஏ.ஐ மூலம் ரீ கிரியேட் செய்துள்ளார்கள்.அவை பார்ப்பதற்கே மிகவும் சிறப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











