தெறிக்கவிடும் டிரெண்டிங்.. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்த அஜித், விஜய் ரசிகர்கள்.. யாருக்கு முதலிடம்?

சென்னை: விடாமுயற்சி படம் ஏமாற்றினாலும் அஜித்தின் மீது உள்ள அன்பும் நம்பிக்கையும் அஜித் ரசிகர்கள் மத்தியில் என்றுமே குறையாது என்பதற்கு ட்விட்டர் டிரெண்டிங்கில் விஜய்யின் தவெக ஹாஷ்டேக்கை பின்னுக்குத் தள்ளி குட் பேட் அக்லி ஹாஷ்டேக் முதலிடத்தில் இருப்பதே உதாரணம் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் இந்த மாதம் பிப்ரவரி 6ம் தேதி வெளியான விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றதுமே ஒரு சில அஜித் ரசிகர்கள் அஜித்தையே திட்ட ஆரம்பித்துவிட்டனர். மேலும், ஒரு சிலர் விஜய் ரசிகராக மாறப்போகிறேன் என்றெல்லாம் பதிவிடத் தொடங்கினர்.

Ajith Kumar Vijay Maha Shivratri 2025

ஆனால், என்றுமே உண்மையான ரசிகர்கள் அஜித் பக்கமே நிற்போம் என அடுத்து வரவிருக்கும் குட் பேட் அக்லி படத்திற்காக எப்போதும் போல வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

டிரெண்டிங்கில் அஜித், விஜய்: தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சோஷியல் மீடியா டிரெண்ட் என்றால் அஜித் மற்றும் விஜய் தான் எப்போதுமே டாப் டாபிக்காக உள்ளனர். தமிழ்நாடு வெற்றிக் கழகம் 2வது ஆண்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், #தமிழகவெற்றிக்கழகம் ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அதே போல அஜித் குமாரின் குட் பேட் அக்லி டீசர் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், #GoodBadUglyTeaser ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் நேற்று வெளியான டீசர் அப்டேட்டில் இருந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Ajith Kumar Vijay Maha Shivratri 2025

விஜய்யை முந்திய அஜித்: நடிகர் விஜய் அரசியல் தலைவராக மாறியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது ஆண்டு விழா இன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் உருவாக்கியுள்ள #தமிழகவெற்றிக்கழகம் 21 ஆயிரத்துக்கும் அதிகமான ட்வீட்களுடன் டாப் 2வில் இருக்கும் நிலையில், அஜித் குமாரின் #GoodBadUglyTeaser ஹாஷ்டேக் 80 ஆயிரம் ட்வீட்களுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது ஆண்டு விழாவில் விஜய் பேசியதும் இந்த நிலை மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar Vijay Maha Shivratri 2025

மகா சிவராத்திரி: #Mahashivratri2025 ஹாஷ்டேக்கும் இன்று நாடு முழுவதும் பெரும் கவனத்தை பெற்று வருகிறது. ஏகப்பட்ட இந்துக்கள் சிவனை வழிபட்டும் சிவன் தொடர்பான வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Ajith Kumar Vijay Maha Shivratri 2025

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X