அடேங்கப்பா!.. அஜித்தும் விஜய்யும் இப்படி சந்திச்சா எப்படி இருக்கும்.. ஏஐ க்ரியேட்டிவிட்டி லெவலே வேற!

சென்னை: நடிகர் அஜித் குமார் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செய்தி அறிந்த நடிகர் விஜய் உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அதை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய இருவரது சந்திப்பு புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே தங்களுக்கான தனி ரூட்டை பிடித்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் படையுடன் தொடர்ந்து பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரங்களாக மாறி விட்டனர்.

Ajith Kumar and Vijay will meet like this future a super creative AI photo trending

படங்கள் சொதப்பினாலும், சரியாக ஓடவில்லை என்றாலும் இந்த இருவரையும் ரசிகர்கள் ஒருபோதும் கை விடவில்லை. ஒரு படம் சொதப்பினால், அடுத்த படமே சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றனர்.

அப்பல்லோவில் அட்மிட்டான அஜித்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை அஜர்பைஜானில் முடித்து விட்டு சில வாரங்கள் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், காதுக்கும் மூளை நரம்புக்கும் இடையே உருவான சிறிய கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு நாள் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றார்.

பிரபலங்கள் பிரார்த்தனை: ஆரம்பத்தில் அஜித் குமாருக்கு ஒன்றுமில்லை என்றும் சாதாரண ஜெனரல் செக்கப் என்றே தகவல்கள் வெளியாகின. ஆனால், அதன் பின்னர் அஜித்துக்கு மைனர் சர்ஜெரி என தகவல் வந்ததும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அச்சம் கொள்ள ஆரம்பித்து விட்டனர். வலிமை பட பிரச்சனைகளையும் மறந்து யுவன் சங்கர் ராஜா அஜித் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தார். சமுத்திரகனி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் அஜித் குணமடைய பிரார்த்தனை செய்தார்.

போன் பண்ண விஜய்: நண்பர் அஜித்துக்கு தளபதி விஜய் பதறிப்போய் போன் போட்டு நலம் விசாரித்ததாகவும் நேரில் வந்து சந்திக்க அனுமதி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களுடன் அதன் காரணமாக சில நாட்களாக சோஷியல் மீடியா சண்டையை தவிர்த்து நட்புக் கொடியை நட்டு வருகின்றனர்.

விஜய் அஜித் சந்திப்பு: இந்நிலையில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட விஜய், அஜித் சந்திப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. நடிகர் அஜித் அரசியல் பிரச்சாரத்துக்காக வேன் மீது அமர்ந்து செல்வதும், நடிகர் அஜித் குமார் பைக் ரேஸ் சென்றுக் கொண்டே அவரை சந்திக்கும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த புகைப்படம் தல தளபதி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

என்ன ஆகும் தமிழ் சினிமா: இப்படி இருவருமே ஆளுக்கொரு திசையில் சென்று விட்டால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்ன ஆகும் என்கிற கேள்வியையும் வருத்தத்தையும் கூட ரசிகர்கள் அந்த போட்டோவுக்கு கீழ் கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர். நல்ல படங்கள் வந்தால் நிச்சயம் புதிய ஹீரோக்களும் சூப்பர் ஸ்டார்களும் உருவாகத்தான் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X