Ajith Kumar: 15 கிலோ உடல் எடையை குறைத்த அஜித்குமார்.. இப்படித்தான் குறைத்தாரா?.. ரொம்ப கஷ்டமாச்சே!
சென்னை: விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித்குமார் திடீரென 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து சூப்பர் ஸ்லிம்மாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். அவர் எப்படி இதை சாத்தியமாக்கினார் என்கிற தகவல் தான் தற்போது இணையத்தை அதிர வைத்து வருகிறது.
துணிவு படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைக்க ரொம்பவே கஷ்டப்பட்டும் முடியாத நிலையில், பெரிய தாடி எல்லாம் வைத்து லுக்கை மேட்ச் செய்து எச். வினோத் அந்த படத்தை இயக்கினார்.

உடல் எடையை குறைத்த அஜித்: விடாமுயற்சி படத்திலும் இதே லுக் தானா என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக படிப்படியாக உடல் எடையை அஜித் குறைத்து சூப்பரான தோற்றத்திற்கு தற்போது வந்து விட்டார் என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
15 கிலோ காலி: பரமசிவன் படத்தில் இருந்தே நடிகர் அஜித் குமார் தனது உடல் எடையை அவ்வப்போது அதிரடியாக பல கிலோக்கள் குறைத்து ரசிகர்களை மட்டுமின்றி சினிமா துறையினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி படத்துக்காக இதுவரை 15 கிலோ எடை குறைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீண்டும் பில்லா லுக்கிற்கு நடிகர் அஜித் வந்து விடுவார் என்றே கூறுகின்றனர்.
என்ன செய்தார்: நடிகர் அஜித் திடீரென இத்தனை கிலோ எடையை எப்படி குறைத்தார் என பலரும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அறுவை சிகிச்சை செய்து குறைத்தாரா? என்கிற கேள்விகளும் கிளம்பின. ஆனால், அதெல்லாம் இல்லை என்றும் இந்த முறை வித்தியாசமான ட்ரீட்மென்ட்டில் அஜித் உடல் எடையை குறைத்துள்ளார் என்று கூறுகின்றனர். சமீபத்தில் நடிகர் ஆரவ் விடாமுயற்சி படத்தில் இணைந்த நிலையில் அவருடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
நான் வெஜ் பிரியர்களுக்கு ஆப்பு: நடிகர் அஜித் என்றாலே ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி செய்துக் கொண்டு படக்குழுவினருடன் அவரும் உண்டு மகிழ்வார் என்றே கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், இனிமேல் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் நான் வெஜ்ஜை முற்றிலுமாக ஒதுக்கி விட்டு சைவ உணவுகளை எடுத்து வந்தே இப்படியொரு டிரான்ஸ்ஃபர்மேஷனை அஜித் நிகழ்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த டயட்டை ஃபாலோ பண்றது ரொம்ப கஷ்டமாச்சேப்பா என அஜித் ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











