Ajithkumar: தல போல வருமா.. 2025இல் அஜித்தான் பெஸ்ட்.. என்ன விஷயம்னு தெரியுமா? பூரிப்பில் ஷாலினி!

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் மட்டும் இல்லாமல் கார் ரேஸ் மற்றும் பைக் ரைடில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தனது கார் ரேஸ் அணியான அஜித் குமார் ரேஸிங் அணியை உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ரேஸ் பந்தயங்களில் களமிறக்கி, பரிசுகள் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தார். இப்படி இருக்கும்போது இவருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஜென்டில்மேன் டிரைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது இத்தாலியில் வழங்கப்பட்டுள்ளது. இதை பெறுவதற்காக தனது குடும்பத்துடன் இத்தாலிக்குச் சென்று வாங்கியுள்ளார் அஜித்.

கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திலேயே தனது நடிப்பில் உருவாகி இருந்த இரண்டு படங்களான அதாவது, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் தனது வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு சென்றார் அஜித். குறிப்பாக தனது டப்பிங் வேலைகளை மூன்று நாட்களோ, இரண்டு நாட்களோ, தொடர்ந்து இருந்து செய்து முடித்துக் கொடுத்தார். மேலும் படப்பிடிப்புகளின் போதே, படங்களின் தனது வேலைகள் என்று எதுவும் மிச்சம் இருக்க கூடாது, அப்படி இருந்தால், தன்னால் கார் ரேஸில் முழு கவனத்துடன் ஈடுபட முடியாது என்று தெரிவித்ததாக கூறினார்கள்.

Ajith Kumar have been awarded Gentleman Driver of the Year 2025 Venice Italy From Philippe Charriol Motorsports Group
Photo Credit:

கமிட்மெண்ட்: குறிப்பாக காரின் எக்ஸலரேட்டரை மிதிக்கும் போது, அதன் கடைசி வரைக்கும் மிதிக்க வேண்டும் என்றால், தனக்கு வெளியில் எந்த வேலைகளும் இருக்க கூடாது, அதாவது தான் செய்தால்தான் அந்த வேலைகள் நடக்கும் என்று எதுவும் இருக்க கூடாது என்று கருதி உள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. அதனால்தான் அஜித் தனது 64 வது படம் என்று எதிலும் கமிட் ஆகாமல் இருந்துள்ளார்.

விருது: அவரது கார் ரேஸ் அணி, இதுவரை இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒருமுறை இரண்டாவது இடத்தையும் வென்றுள்ளது. இதில் 24 மணி நேர பந்தயங்கள், 12 மணி நேர பந்தயங்கள் என்று இரண்டு வகைகளில் பந்தயங்கள் நடைபெற்றது. இவரது தனிப்பட்ட முயற்சியால் தற்போது தமிழ்நாடும் இந்தியாவும் பெருமை பெற்று வருகிறது. இப்படி இருக்கும்போது, இவருக்கு 2025 ஆம் ஆண்டின் ஜென்டில்மேன் டிரைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இத்தாலியின் வெனிஸில் தொழில்முனைவோர் மற்றும் கார் ரேஸருமான மறைந்த பிலிப் சாரியோலின் நினைவாக, நடிகரும் ரேஸருமான அஜித் குமாருக்கு 2025 ஆம் ஆண்டின் ஜென்டில்மேன் டிரைவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

Ajith Kumar have been awarded Gentleman Driver of the Year 2025 Venice Italy From Philippe Charriol Motorsports Group
Photo Credit:

ஷாலினி: இது தொடர்பாக அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். இந்த விருதை வாங்க அஜித்குமார் தனது குடும்பத்துடன் இத்தாலிக்குச் சென்றுள்ளார். தற்போது ஷாலினி பகிர்ந்துள்ள புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் அஜித்துக்கும் அவரது ரேஸிங் அணியின் குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X