Dheena Re Release Collection: கில்லியை முந்தியதா அஜித்தின் தீனா, பில்லா.. முதல் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை: நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்திலிருந்தும் குட் பேட் அக்லி படத்திலிருந்தும் எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையில் ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு கொண்டாட்டம் தியேட்டர்களில் தீனா மற்றும் பில்லா படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது தான்.

தீனா மற்றும் பில்லா படங்கள் நேற்று மீண்டும் வெளியான நிலையில் வசூல் மிகப்பெரிய அளவில் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே அந்தப் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

Ajith Kumar birthday special movies Dheena and Billa re release first day box office collection

காசி தியேட்டரில் எபினேஷ் எனும் அஜித் ரசிகர் கில்லி படத்தின் போஸ்டரை கிழித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதற்காக போலீசார் அவரை கைது செய்ய பின்னர் தனது தவறை உணர்ந்து அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார். மேலும், ரோகிணி தியேட்டரில் அஜித் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து மோசமான செயல்களில் ஈடுபட்டது மேலும், பரபரப்பை கிளப்பியது.

கில்லி ரீ ரிலீஸ் வசூல்: தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் நடித்து வெளியான கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் நவீனமயமாக்கப்பட்டு வெளியானது. கில்லி திரைப்படம் அப்போது வெளியான போதே 50 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், தற்போது 2 வாரங்களில் 25 கோடி ரூபாய் வசூலை அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் பிறந்தநாள்: நடிகர் அஜித்தின் 53வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு எந்த ஒரு பெரிய அப்டேட்டும் அஜித் தரப்பிலோ அல்லது தயாரிப்பு நிறுவனங்களின் தரப்பிலோ வெளியாகவில்லை. தியேட்டரில் தீனா மற்றும் பில்லா ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அந்த படங்களைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர்.

தீனா மற்றும் பில்லா வசூல்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் குமார், லைலா, சுரேஷ் கோபி நடித்து 2001ம் ஆண்டு வெளியான தீனா திரைப்படம் நேற்று அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் வெளியானது. அதே போல விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார், நயன்தாரா, நமீதா, பிரபு நடிப்பில் வெளியான பில்லா படமும் நேற்று வெளியானது. 2 படங்களின் முன்பதிவு மொத்தமாகவே 83 லட்சம் ரூபாய் தான் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், முதல் நாள் வசூல் இரண்டு படங்களையும் சேர்த்தே 1.5 கோடி கூட வரவில்லை எனக் கூறுகின்றனர்.

கில்லியை நெருங்கல: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா மற்றும் பில்லா ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வசூல் முதல் நாளிலேயே 4 கோடி ரூபாய் வசூலை அள்ளிய அளவுக்கு 2 படங்களை பந்தயத்திற்கு விட்டும் கில்லி படத்தை நெருங்க முடியவில்லை. கடந்த ஆண்டு அஜித் நடித்த துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்துடன் கிளாஷ் விட்டும் வசூலில் தோற்றது குறிப்பிடத்தக்கது. கில்லி படம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு எல்லாம் வெளியாகவில்லை என்றும் விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X