Anil Kumar: பிரேக்கப்பால் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. அஜித் குமாரின் தம்பி அனில் குமார் ஓபன் பேட்டி!

சென்னை: ஐஐடியில் படித்துவிட்டு வெளிநாட்டில் சிட்டிசன்ஷிப் எல்லாம் வாங்கிய நான் மீண்டும் இந்தியாவுக்கு வந்து ஸ்டார்ட்டப் நிறுவனம் நடத்துகிறேன் என்று சொன்னதும் பலரும் ஏளனமாக பேசினார்கள். ஆனால், எனக்கு எது பிடித்திருக்கிறதோ அதை நான் செய்து வருகிறேன். சமீபத்தில், என்னுடைய அண்ணன் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது கிடைத்தது ரொம்பவே பெருமைக்குரிய விஷயம். எங்கள் குடும்பமே சந்தோஷமாக உள்ளோம் என்றார்.

நடிகர் அஜித் குமாருக்கு அனுப் குமார் என்கிற அண்ணனும் அனில் குமார் என்கிற தம்பியும் உள்ளனர். அஜித் குமாரை போலவே இருக்கும் அனில் குமார் லேட்டஸ்ட்டாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ajith kumar anil kumar anil kumar interview

அஜித் குமாரை போலவே வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை தனது வாழ்க்கையில் இருந்தே எடுத்து அவர் பேசியிருப்பது நிச்சயம் இளைஞர்கள் கேட்க வேண்டிய அட்வைஸாகவே அமைந்துள்ளது.

முதல் திருமணம் பிரேக்கப்: ஐஐடியில் படித்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்தேன். ஆனால், என்னுடைய முதல் திருமணம் பிரேக்கப்பில் முடிந்தது. உயிருக்கு உயிராக காதலித்தோம். குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசிட்டு இருந்தோம். ஆனால், திடீரென என்னை விட்டுச் சென்றுவிட்டால் அப்போ இருந்த சூழ்நிலையில், கையில் ஒரு துப்பாக்கி மட்டும் இருந்திருந்தா சுட்டுக் கொண்டு செத்துருப்பேன். ஆனால், அதன் பின்னர் தான் வாழ்க்கை என்றால் என்னவென்றே புரிந்தது.

பளார்னு அறைவேன்: இப்போ யாராவது 21 வயசு பையன் என்னிடம் வந்து காதல் தோல்வியால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று சொன்னால், கன்னத்தில் பளார்னு ஒரு அறைவிட்டு, இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு தோல்வியே கிடையாது. இது போல பல பிரச்சனைகளை இந்த வாழ்க்கை முழுவதும் சந்திக்க தயாராக இரு என அட்வைஸ் பண்ணுவேன். நான் ஒரு பயிற்சிபெற்ற கவுன்சிலர் எல்லாம் கிடையாது. ஆனால், என்னோட வாழ்க்கை அனுபவத்தில் இருந்து இதை நான் சொல்கிறேன் என்று பொறுப்பு துறப்பையும் போட்டு அவர் பேசியதை கேட்டு ரசிகர்கள் அப்படியே அஜித் குமார் போலவே அவரது தம்பியும் பேசுகிறாரே என அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

எனக்கும் பத்ம பூஷன்: என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார். சமீபத்தில் என் அண்ணனுக்கு இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து மெசேஜ் அனுப்பினார். அதன் பின்னர் ஜி உங்களுக்கும் பத்ம பூஷன் கிடைக்கும் எனக் கூறினார். நான் அவரிடம் பத்ம பூஷன் எல்லாம் வேண்டாம் ஜி புண்ணியம் கிடைத்தாலே போதும் என்று பதில் அளித்தேன் என தனக்கு என்ன வேண்டும் என்பதிலும் தான் தெளிவாக இருப்பதை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X