7 மணிக்கு முன்பே வாக்களித்த அஜித்.. தமிழகத்தில் வாக்களித்த முதல் நபர்!
சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் , முதல் ஆளாக நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
சட்டமன்ற தேர்தல்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழில், தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது. இதில் மொத்தம் உள்ள 234 தொகுகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் களமிறங்கி இருப்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது. எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் வாக்குகளை செலுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து விமானத்தின் மூலம் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

7 மணிக்கு முன்பே வாக்களித்தார்: இந்நிலையில் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக துபாயில் இருந்த அஜித் நேற்று ஜனநாய கடமையை நிறைவேற்றுவதற்காக விமானத்தின் மூலம் சென்னை வந்தார். இதையடுத்து இன்று காலை வெள்ளை நிற கோட் சூட்டில் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 15 நிமிடங்களே இருந்த நிலையில் அங்கு வந்த அஜித் சரியாக 6.55 மணிக்கு அதாவது தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே தனது வாக்கினை செலுத்தினார். இதன் மூலம் தமிழகத்தில் முதல் ஆளாக அஜித் வாக்களித்துள்ளார். இவரை பார்ப்பதற்காக அவரின் ரசிகர்கள் காலை 6 மணி முதலே இங்கு கூடியிருந்ததால் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அஜித் தனது வாக்கினை செலுத்தினார்.


Click it and Unblock the Notifications