நண்பர்கள், உறவினர்கள் சூழ... 'குட்டித் தல' பர்த் டேவை கொண்டாடிய அஜித்... வைரலாகும் வீடியோ

By

சென்னை: நடிகர் அஜித்குமார் தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Recommended Video

Advik Ajith B'day Celebration | Ajith Shalini | Droupathi | Rishi Richard

அஜித்குமார், இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார்.

'நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் பிரபல இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார்.

ஹூமா குரேஸி

ஹூமா குரேஸி

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக, ஹூமா குரேஸி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. பின்னர் படக்குழு சென்னைத் திரும்பியது.

அஜித் காயம்

அஜித் காயம்

அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டு படமானது. இந்த படத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. அப்போது இயக்குனர் உட்பட பலர் ரெஸ்ட் எடுக்குமாறு கூறியும் மறுத்துவிட்ட அஜித், காயத்துடனேயே நள்ளிரவு வரை ஷூட்டிங்கில் கலந்துகொண்டு முடித்துக் கொடுத்தார் என்று படக்குழு தெரிவித்திருந்தது.

துப்பாக்கியுடன் அஜித்

துப்பாக்கியுடன் அஜித்

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத் தளத்தில் வைரலானது. துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித். அதற்காக முறைப்படி பயிற்சி எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த 45 ஆவது தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் அவர் கலந்துகொண்டார்.

பயிற்சி

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அப்போது வைரலாகின. இதையடுத்து இப்போது அவர் துப்பாக்கிச் சுடுவது போன்ற புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த வருட துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் அவர் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. அதற்கான பயிற்சியில் எடுக்கப்பட்டுள்ளார் என்றும் அந்த புகைப்படம்தான் அது என்று தெரிய வந்தது.

குட்டித் தல ஆத்விக்

இந்நிலையில், படப்பிடிப்பில் இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துள்ள அஜித், தனது மகன் ஆத்விக்கின் பிறந்த நாளை நேற்று கொண்டாட்டியுள்ளார். ஸ்பெஷல் காஸ்ட்யூமில் இருந்தார் குட்டித் தல, ஆத்விக். இதில் ஆத்விக்கின் குட்டி நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X