AK 62.. வேற வழியே இல்ல ஒத்தி வைக்க வேண்டியதுதான் - அஜித் எடுத்திருக்கும் முடிவு இதுவா?
சென்னை: ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத சூழலில் அஜித் புதிதாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெச்.வினோத்துடன் தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றினார் அஜித். இந்த மூன்று படங்களையும் போனி கபூர் தயாரித்திருந்தார். நேர்கொண்ட பார்வையும், வலிமையு கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இதனால் மூன்றாவது படத்தில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினர் அஜித்தும், வினோத்தும்.

துணிவு தந்த வெற்றி
அதன்படி அஜித் - வினோத் கூட்டணியில் துணிவு படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. துணிவு படத்துக்கு போட்டியாக வாரிசு படமும் களமிறங்கியதால் கடந்த பொங்கல் அஜித், விஜய் ஆகியோரின் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இரண்டு படங்களும் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியிருப்பதாக கூறப்பட்டாலும் கதை ரீதியாக துணிவு படத்துகே பலரும் தங்களது வரவேற்பை அளித்தனர்.

ஏகே 62வில் கமிட்டான அஜித்
துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அஜித் தனது 62ஆவது படத்தில் கமிட்டானார். முதலில் விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை ஏகே 62விலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார். விக்கி சொன்ன முழு கதையும் திருப்தி தராததால் அவர் வெளியேற்றப்பட்டார் என தகவல்கள் கூறுகின்றனர். இதனையடுத்து இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்தின் 62ஆவது படத்தை இயக்கவுள்ளார்.

தாமதமாகும் ஏகே 62 அறிவிப்பு
ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார் என கூறப்பட்டாலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. நிலைமை இப்படி இருக்க லைகா நிறுவனத்திடமிருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், நேற்று (2.3.2023) தங்களது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஏகே 62வின் அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க; ரஜினியும், ஜெய் பீம் இயக்குநர் ஞானவேலுவும் இணையும் படத்தின் அறிவிப்பாக அது அமைந்தது. இதனால் ஏகே ரசிகர்கள் பெரும் அப்செட்டாகியுள்ளனர்.

எப்போது வருகிறது அறிவிப்பு?
தொடர்ந்து ஏகே 62 அறிவிப்பு தாமதமாகிவருவது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது துணிவு கொடுத்த வெற்றி அஜித்துக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதனால் ஏகே 62 படத்தின் டைட்டிலையே இதுவரை இல்லாத அளவு புதுமையாக வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக லியோ டைட்டில் ப்ரோமோ எப்படி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து, வரவேற்பைப் பெற்றிருக்கிறதோ அதைவிட பன்மடங்கு ஏகே 62 டைட்டிலும், அதுகுறித்த அறிவிப்பும் இருக்க வேண்டுமென அஜித் தரப்பும், படக்குழுவும் திட்டமிட்டிருக்கிறதாம். இதற்காக மகிழ் திருமேனியும் அவரது உதவி இயக்குநர்களும் தீவிரமாக உழைத்துவருகிறார்கள் எனவும், அனேகமாக அடுத்த வாரத்துக்குள் படத்தின் அறிவிப்பு வெளியாகிவிடும் என தெரிகிறது.

ஏகே 62வுக்காக ப்ளானை மாற்றிய அஜித்குமார்
அதேபோல் ஏகே 62க்காக அஜித்குமார் தனது ப்ளானையும் மாற்றியிருக்கிறார் என கூறப்படுகிறது. ஏகே 62க்கு முன்னதாக பைக்கிலேயே உலகத்தை சுற்ற அஜித் திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் ஏகே 62 படத்தின் மூலம் மீண்டும் தரமான வெற்றியை கொடுத்துவிட அஜித் முனைந்திருப்பதால் தனது வேர்ல்ட் டூரையும் தள்ளி வைத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











