அரபிக் குத்து பாட்டுக்கு அஜித் ஆடுறாரே.. பையன் புடிச்சிட்டான்.. எல்லாம் டெக்னாலஜி.. வேறமாறி!

சென்னை: ஏஐ டெக்னாலஜி மூலமாக இளம் வயது ஜாக்கிசானையே உருவாக்கி ஜாக்கிசானின் புதிய படமான 'எ லெஜண்ட்' படத்தில் பயன்படுத்த உள்ளனர். அந்த அளவுக்கு டெக்னாலஜி மிகப்பெரிய அளவில் வளர்ந்து கொண்டு போகிறது. இந்நிலையில், அஜித்தை தற்போது அரபிக் குத்து பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து ஏஐ எடிட் மூலம் நடனமாட வைத்துள்ளனர். அதை வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி வருகிறது.

ஏஐ டெக்னாலஜி மூலமாக நடிகர் அஜித்தை பாகுபலி போல அரசனாகவும் மேலும் பல கெட்டப்புகளில் தாறுமாறாக உருவாக்கி ஏகப்பட்ட போட்டோக்களை ரசிகர்கள் வெளியிட்டு வந்தனர். தற்போது அதன் அடுத்த கட்டமாக வீடியோக்களையும் உருவாக்கத் தொடங்கிவிட்டனர்.

Ajith Kumar dances with Vijay for Arabic Kuthu song edit video goes trending

இது இப்படியே போனால், நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏஐ டெக்னீஷியனை வைத்தே படங்களை உருவாக்கி விடுவார்கள் போலத் தெரிகிறதே எனநெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அஜித் பிறந்தநாள்: வரும் மே ஒன்றாம் தேதி அஜித்குமாரின் 53 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தனது மகள் அனோஷ்கா பிறந்தநாள், மகன் ஆத்விக் பிறந்தநாள் மற்றும் சமீபத்தில் தனது திருமண நாளையும் படுஜோராக அஜித் கொண்டாடி இருந்தார். இந்நிலையில், குடும்பத்துடன் அவரது பிறந்த நாளையும் கோலாகலமாக கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி படப்பிடிப்பு: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் நான்கு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த படம் டிராப் ஆகிவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், உடனடியாக சுரேஷ் சந்திரா கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து வீடியோவை வெளியிட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்தை டிராப் ஆகிருச்சு என்று எப்படி சொல்லலாம் என கேள்வி எழுப்பியிருந்தார். அதன் பின்னர் தேர்தலுக்குப் பிறகு விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னமும் அந்த படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரபி குத்து பாடலுக்கு அஜித் நடனம்: சமூக வலைத்தளத்தில் நடிகர் அஜித்குமாரின் ஏஐ எடிட் புகைப்படங்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டு தீயாக பரவி வருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் இணைந்து அரபி குத்து பாடலுக்கு அஜித்தும் நடனம் ஆடுவது போன்று எடிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

குட் பேட் அக்லி: மார்க் ஆண்டனி படத்தை இயக்கி வெற்றி பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X