தயாநிதி மாறன் மகனுக்காக அம்மா இல்லாமல் சோலோவாக வந்த அஜித் மகள்.. களைகட்டிய கதை ஷார்ட்ஸ் நிகழ்ச்சி!
சென்னை: நடிகர் அஜித் குமாரின் மகள் அனோஷ்கா சென்னை லீலா பேலஸில் மே 28ம் தேதி நடைபெற்ற கதை ஷார்ட்ஸ் ஆப் அறிமுக விழாவில் பங்கேற்று நிகழ்ச்சியை வேறலெவலில் வைரலாக்கிவிட்டார். பொதுவாகவே அம்மா ஷாலினியுடன் தான் சினிமா விழாக்களுக்கு அனோஷ்கா வருவது வழக்கம். ஆனால், இந்த முறை தனது நண்பர்களுடன் அவர் பங்கேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தயாநிதி மாறன் மகன் கரண் தயாநிதி மாறன் புதிதாக கதை ஷார்ட்ஸ் எனும் மொபைல் ஆப் ஒன்றை நேற்று லாஞ்ச் செய்தார். 2 நிமிட எபிசோடுகள் அடங்கிய மினி சீரிஸ்களை இனிமேல் இந்த ஆப் மூலம் காணலாம் என்றும் இதுதான் எதிர்காலம் என்றும் ரீல்ஸ் பார்க்கும் இளைஞர்களுக்கு அந்த நேரத்தில் ஒரு மினி சீரிஸையே தரமாக கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் இப்படியொரு செயலியை அவர் உருவாக்கி அறிமுகப்படுத்தினார்.

நடிகையும் இயக்குநருமான ரோகிணி இயக்கிய அவள் = அவன்?, யூகி சேதுவின் மன்மதலீலை உள்ளிட்ட ஏகப்பட்ட குறும் சீரியல்கள் அந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. மேலும், சினிமா கனவுடன் இருக்கும் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் தாங்கள் ரெடியாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
கதை ஷார்ட்ஸ் ஆப் அறிமுகம்: தயாநிதி மாறனின் மகன் கரண் தயாநிதி மாறன் புதிதாக சினிமா மற்றும் சீரிஸ் பார்க்கும் ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு கதை ஷார்ட்ஸ் எனும் ஆப்பை உருவாக்கி நேற்று அறிமுகப்படுத்தினார். சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற இந்த விழாவில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். நடிகர் அஜித் குமார் மகள் அனோஷ்காவும் பங்கேற்றது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித் மகள் பங்கேற்பு: அஜித் மற்றும் ஷாலினியின் மகள் அனோஷ்கா கல்லூரி படிப்பை முடித்த நிலையில், தனது நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு கரண் தயாநிதி மாறன் நடத்திய கதை ஷார்ட்ஸ் ஆப் அறிமுக விழாவில் பங்கேற்றார். கரண் தயாநிதி மாறன், சபரிஷ் வெங்கட் உள்ளிட்டோரின் தோழியாகவே அனோஷ்கா அஜித் அந்த விழாவில் பங்கேற்றது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அம்மா ஷாலினி இல்லாமல் தனது நண்பர்களுக்காக அஜித் மகள் விழாவில் தனது தோழிகளுடன் வந்து கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை வேறலெவலில் வைரலாக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications