Bava Lakshmanan: அஜித் வீட்டு வாசலுக்குப் போய் நின்றும் உதவவில்லை.. மனமுடைந்து பேசிய பாவா லட்சுமணன்

சென்னை: "வாம்மா மின்னல்" காமெடி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சிரிக்க வைத்த பாவா லட்சுமணன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர்கள் அஜித், விஜய், வடிவேலு போன்றவர்கள் தனக்கு உதவவில்லை என்பது வருத்தமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

வடிவேலுவுடன் பல படங்களில் துணை காமெடியனாக நடித்து பிரபலமான பாவா லட்சுமணன் நீரிழிவு நோய் காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Ajith Kumar didnt help me for my medical expenses - Bava Lakshmanan open interview

அவரது கால் கட்டை விரல் நீரிழிவு நோய் காரணமாக அகற்றப்பட்ட நிலையில், சினிமா வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்து விட்டதாகவும், தனக்கு கேபிஒய் பாலா எல்லாம் யாருன்னே தெரியாது அவர் வந்து உதவினார் என்றும் சமுத்திரகனி உள்ளிட்டோர் உதவியதையும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித் வீட்டு வாசல்ல போய் நின்னும் உதவல: நடிகர் அஜித்தின் பல படங்களில் நடித்துள்ளேன். உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், உதவி கேட்டு அஜித் வீட்டுக்கெல்லாம் சென்று சிசிடிவி கேமராவில் முகத்தை எல்லாம் காட்டினேன். அவரது மேனேஜர் உடன் எல்லாம் தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால், ஒரு ரூபாய் கூட உதவவில்லை. அது ரொம்பவே மனவேதனை கொடுத்தது என பாவா லட்சுமணன் தனது புதிய பேட்டியில் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Ajith Kumar didnt help me for my medical expenses - Bava Lakshmanan open interview

வடிவேலு ஒண்ணுமே பண்ணல: மாயி படத்தின் "வாம்மா மின்னல்", வாள மீன் இருக்குதுங்கிறானுங்க, வஞ்சர மீன் இருக்குதுங்கிறாங்க.. ஆனால், நீங்க கேட்ட ஜாமீன் மட்டுமில்லையாம் என வடிவேலுவுடன் பாவா லட்சுமணன் பண்ணிய காமெடிக்கெல்லாம் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றனர். ஆனால், வடிவேலு இதுவரை ஒரு போன் பண்ணிக் கூட நலம் விசாரிக்கவில்லை என்றும் அதெல்லாம் அவர் பண்ணவே மாட்டாருங்க என்றும் தடாலடியாக பேசியுள்ளார். விவேக் செத்ததற்கே போய் பார்க்காத மனுஷன் அவர் என பேசி அதிர வைத்துள்ளார்.

விவேக், மயில்சாமி, மனோபாலா: விவேக், மயில்சாமி, மனோபாலா இருந்திருந்தால் எனக்கு இந்த நிலையே வந்திருக்காது. பல முறை என் கஷ்ட காலத்தில் பட வாய்ப்பு இல்லாத சூழலில் எல்லாம் விவேக் ரொம்பவே உதவி செய்துள்ளார். மயில்சாமி மற்றும் மனோபாலாவும் உதவியிருக்கின்றனர். அவர்கள் இல்லாத நிலையில், தான் நான் மற்றவர்களிடம் உதவியை கேட்கவே ஆரம்பித்தேன் என பேசியுள்ளார்.

கேபிஒய் பாலா உதவி: கேபிஒய் பாலா தம்பி எல்லாம் யாருன்னே தெரியாது. அவரும் விஜய் டிவி லொள்ளு சபா குழுவினரும் வந்து என்னை சந்தித்து நலம் விசாரித்து உதவிகளை செய்தனர். பாலா 30 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். சமுத்திரகனி சார் எல்லாம் செய்த உதவியை மறக்கவே மாட்டேன் என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X